கூகுள் டூடுல் கொண்டாடும் சிப்கோ இயக்கம் பற்றி அறிவோம்சூழலியலைப் பாதுகாப்பதனை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட சிப்கோ இயக்கம் (Chipko Movement) மரங்களை வெட்ட வருவோரைத் தடுத்து மரங்களைக் கட்டித் தழுவியபடி காக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டதனால், இதற்கு சிப்கோ அந்தோலன் என அழைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

சிப்கோ இயக்கம்

கூகுள் நிறுவனம் இன்றைக்கு அறிமுகப்படுத்தியுள்ள மிகவும் கல்ஃபுல்லான இந்த டூடுலில் சூழலியலை காக்கும் வகையில் மகளிர் மரத்தை சுற்றி நின்று போராடும் வகையில் சித்திரத்தை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

1970 ஜூலை 20-ம் தேதி சமோலி மாவட்டம் அலக்நந்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், திடீரென 60 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்ததால் ஏற்பட்ட ஆபத்தைச் சண்டி பிரசாத் நேரில் கண்டிருந்தார்.

கிட்டத்தட்ட 400 சதுர கிலோ மீட்டர் பரப்பு வெள்ளத்தில் மூழ்கியது, சாலைகளும் பாலங்களும் அடித்துச் செல்லப் பட்டன, கானா என்ற 330 அடி ஆழ ஏரியில் இடிபாடுகள் சிக்கிக்கொண்டன. இந்த வெள்ளத்தின் காரணமாக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் 10 லட்சம் ஏக்கர் வயல்களுக்குப் பாசனம் தந்துகொண்டிருந்த வாய்க்கால்கள் தடுக்கப்பட்டன. அடுத்தடுத்த வெள்ளத்தால் வீடுகள், கால்நடை, மக்கள் தொடர்ந்து மடிந்தனர். 1978-ல் அப்பகுதியில் ஏற்பட்ட கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நிலச்சரிவு, கிட்டத்தட்ட 2 மைல் நீளத்துக்குப் பாகீரதி நதியை அடைத்தது. இவை அனைத்துக்கும் பெருமளவு மரம் வெட்டப்பட்டதே காரணம் என்பதை சண்டி பிரசாத் உணர்ந்தார்.

சண்டி பிரசாத் பட், இந்தியச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். ஜெயப்பிரகாஷ் நாராயணின் சர்வோதய இயக்கத்தால் உத்வேகம் பெற்ற பட், கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், காடுகள் மீதான அரசு ஒடுக்குமுறைக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராடினார். அதற்காக, சிப்கோ இயக்கத்தின் தாய் இயக்கமான தாஷோலி கிராம சுயராஜ்ய மண்டல் என்ற அமைப்பை நிறுவினார்.

அந்த அமைப்பின் மூலம் சூழலியலைப் பாதுகாப்பதன் அவசியத்தை, கிராம மக்களுக்கு அவர்களது பாரம்பரிய அறிவின் மூலமாகவே எடுத்துரைத்தார். மக்களோடு மக்களாக எளிமையாக வாழ்ந்த அவர், இயற்கையைச் சிதைக்காமல் அவர்களை உய்விக்கும் வழிகளையும் கண்டறிந்தார்.

முதன்முறையாக சூழுலியலைப் பாதுகாப்பதற்கான அமைப்பு ராஜ்ஸ்தான் மாநிலத்தில் 18 ஆம் நூற்றாண்டில் பிஷ்னோய் சமூகத்தினரால் அமைகப்பட்டது. மரங்களை மான்களை காப்பதற்கு என தூய்மை, அன்பு, அகிம்சை, உயிரினங்களின் மீது நேசம், மரங்கள் மீது பாசம் என மொத்தம் 29 நல்வழிகளைத் தார்மீகக் கடமையாகக்கொண்டு உருவானதுதான் இந்த சமூகமாகும்.