இன்றைய கூகுள் தளத்தின் முகப்பு பக்கத்தில் மிளிருகின்ற கூகுள் டூடுல் பெர்டினாண்ட் மோனயர் என்ற பிரான்ஸ் கண் மருத்துவரின் 181வது பிறந்த நாளை கொண்டாடுகின்றது.

இன்றைய கூகுள் டூடுல் : பெர்டினாண்ட் மோனயர்

பெர்டினாண்ட் மோனயர்

பிரான்ஸ் நாட்டின் கண் மருத்துவரான பெர்டினாண்ட் மோனயர் புகழ்பெற்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு அணியப்படும் கண்ணாடிகளில் குறிப்பிடப்படும் டையாப்ட்டர் (diopter) அல்லது தையொத்தர் என்ற அளவை உருவாக்கியவர்., இதுதவிர, மோனயர் விளக்கப்படம் எனும் பார்வை திறனை அறிய உதவும் எழுத்துக்கள் அடங்கிய படத்தை உருவாக்கியவர் ஆவார்.

இன்றைய கூகுள் டூடுல் : பெர்டினாண்ட் மோனயர்

மே 9,1836 ல் மோனயர் பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவர், கண் தொடர்பான ஆராய்ச்சி மருத்துவராக செயல்பட்டு வந்தார், இவரின் கண்டுபிடிப்புகள் 140 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இன்றைய நவீன உலகத்திலும் மோனயர் சார்ட்டை அடிப்பையாக கொண்டே பார்வைதிறன் மற்றும் டையப்ட்டர் எனப்படும் கண்ணாடிஅளவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.

டையாப்ட்டர் (diopter) அல்லது தையொத்தர் என்பது வில்லை அல்லது வளைந்த கண்ணாடியொன்றின் ஒளியின் வலுவை அளக்கப் பயன்படும் அலகு ஆகும்

ஃபெர்டினாண்ட் மோனயர் ஜூலை 11 ,1912 ல் தனது 76 வயதில் மரணத்தை தழுவினார். அவரது நினைவை போற்றும் வகையிலே இன்றைய டூடுலை கூகுள் முகப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய கூகுள் டூடுல் : பெர்டினாண்ட் மோனயர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here