நேற்று தனது 19வது பிறந்த நாளை கொண்டாடிய கூகுள் நிறுவனம் முக்கிய தினங்களில் டூடுல் வெளியிடுவதனை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு முகப்பை அலங்கரித்துள்ளது.

ஆசிரியர் தினம்

ஏழை குடும்பத்தில் 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் தேதி திருத்தனி  அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்த தலைசிறந்த ஆசிரியராகவும், சிறந்த தத்துவமேதையாகவும் விளங்கினார்.

தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி.ஏ. பட்டமும். பின்னர் முதுகலைத் துறையில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.

இந்தியா முழுவதும் இன்றைய நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் கணிதம், இசை அறிவியல், வானவியல் மற்றும் இயற்கை தொடர்பாக பாடங்களை ஆசிரியர் விளக்குவதாக அமைந்துள்ளது.