தேடுதல் தலைவன் கூகுள் முகப்பு பக்கத்தை இன்றைக்கு சர்வதேச அளவில் பல நாடுகளில் ஜேம்ஸ் வோங் ஹொவ் ( James Wong Howe) அவர்களின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய கூகுள் டூடுல் : ஜேம்ஸ் வோங் ஹொவ்

 ஜேம்ஸ் வோங் ஹொவ்

சீனாவில் பிறந்து 5 வயது முதல் அமெரிக்காவில் வளர்ந்த  ஜேம்ஸ் வோங் ஹொவ் (August 28, 1899 – July 12, 1976) பிரசத்தி பெற்ற ஒளிப்பதிவாளராக திகழ்ந்தார், இனவெறி தாக்குதல் காலத்தில் கடுமையான சிரமங்களை எதிர் கொண்டிருந்தாலும், தனது திறன்பட்ட ஒளிப்பதிவு நுட்பத்தினால் 130 க்கு மேற்பட்ட ஹாலிவுட் திரைபடங்களில் பணியாற்றியுள்ளார்.

இன்றைய கூகுள் டூடுல் : ஜேம்ஸ் வோங் ஹொவ்

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு தனது 5 வயதில் இடம்பெயர்ந்த வோங் ஹொவ் பல்வேறு பணிகளில் ஈடுபட்டடு வந்த நிலையில் பிறகு சினிமா துறையில் ஒளிப்பதிவாளர் பணியை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டார்.

தற்செயலாக கருப்பு மற்றும் வெள்ளை படத்தில் வண்ண நுணுக்கங்களை உருவாக்க இருண்ட பின்புலத்தை இவர் கண்டுபிடித்தார். மேலும் கிராப் டாலி என்ற பெயரில் நான்கு சக்கரங்களை கொண்டு நகரும் வகையிலான கேமரா தாங்கும் அமைப்பினை உருவாக்கினார். மேலும் வெளிச்சத்தை வெளிப்படுத்த லைட்டிங், ஃப்ரேமிங் மற்றும் குறைந்த கேமரா இயக்கம் போன்ற நுட்பங்களை பயன்படுத்தினார்.

இன்றைய கூகுள் டூடுல் : ஜேம்ஸ் வோங் ஹொவ்

இவரது ஒளிப்பதிவு செய்த 10 படங்கள் அகாடமி விருதுகள் (ஆஸ்கர்) தேர்வு பெற்ற நிலையில் தனது படங்களுக்கு 2 முறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். 130 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

தனது தொழிலில் பல்வேறு சாதனைகளை படைத்த ஜேம்ஸ் வோங் ஹொவ்  இன ரீதியான பாகுபாடுகளுக்கு ஆளானதால் சீன விலக்கு சட்டத்தை திரும்ப பெற்ற பின்னரே 1948 ஆம் ஆண்டே இவரது திருமணம் மற்றும் அமெரிக்க குடிமகனாக சட்டப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்டார்.

இன்றைய கூகுள் டூடுல் : ஜேம்ஸ் வோங் ஹொவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here