Olga Ladyzhenskaya’s 97th Birthday

ரஷ்யாவின் பிரசத்தி பெற்ற (Olga Ladyzhenskaya) ஆல்கா லேடிசென்ஸ்கயா வின் 97வது பிறந்தநாளை கூகுள் டூடுள் இன்றைக்கு கொண்டாடுகின்றது. கணித ஆசிரியருக்கு மகளாக பிறந்த  ஆல்கா லேடிசென்ஸ்கயா இயல்பாகவே கணிதம் மீது மிகுந்த ஆர்வத்தை பெற காரணமாக அமைந்தது.

ஆல்கா லேடிசென்ஸ்கயாவின் 97வது பிறந்தநாள்

இவரின் சிறப்பான கணித பணியாக வகையீட்டு சமன்பாடுகளை மற்றும் திரவ இயக்கவியல் ( partial differential equations மற்றும் fluid dynamics) கருதப்படுகின்றது.  இனைறக்கு வெளியிட Google டூடுல் ஒரு நீள்வட்ட வடிவில் உள்ளது, இதன் பின்னணி காரணம் நேரியல் மற்றும் வினையுயிர் நீள்வட்ட சமன்பாடுகள் (linear மற்றும் quasilinear elliptic equations) சம்பந்தப்பட்ட அவரது பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னபாக சோவியத் யூனியன் என அறியபட்ட ரஷ்யாவில் கோலாக்ரிவ் நகரில் மார்ச் 7ம் தேதி 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய முழுபெயர் ஆல்கா அலெக்ஸாண்ட்ரோவ்னா லேடிசென்ஸ்கயா (Olga Aleksandrovna Ladyzhenskaya) ஆகும்.

அவரது தந்தை, சோவியத் யூனியன் அரசாங்கத்தால் “மக்களின் எதிரி” என்று பெயரிடப்பட்டு கைது சைய்யப்பட்டு சோவியத் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் கொல்லப்பட்டார். அப்போது அவருடைய வயது 15 ஆகும். தந்தைக்கு நேர்ந்த கொடுமையை தொடர்ந்தும் இவருடைய கல்வி மீதான ஆர்வம் தொடர்ந்து இருந்தது. ஆனால் இவரின் மேற்படிக்கு அனுகியபோது லெனின்கிராட் பல்கலைக்கழகம் மறுத்தவிட்டது.

அதன் பிறகு 1953 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்டாலின் மறைவிற்கு பிறகு, ஆல்காவுக்கு கல்லூரியில் பயில அனுமதி அளிக்கப்பட்டது. சோவியத்தின் பிரபலமான கணித மேதையான இவன் பெட்ரோவ்ஸ்கி அவர்களின் மாணவியாக இவர் திகழ்ந்தார். அதன் பிறகு இவர் லெனின்கிராட் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டீக்லோவ் நிறுவனம் ஆகியவற்றில் ஆசிரியராக பணியாற்றினார்.

நேவியர்-ஸ்டோக்ஸ் (Navier-Stokes equations) சமன்பாட்டிற்கான, வரையறுக்கப்பட்ட வேறுபாடு வழிமுறையின் ஒருங்கிணைப்பின் முதல்முறையாக மிகவும் சிறப்பான சான்றுகளை ஓல்கா வழங்கினார்.

250 க்கும் மேற்பட்ட ஆய்வுகளின் கட்டுரை ஆசிரியராகவும், பகுதி வேறுபாடு சமன்பாடுகளை தீர்ப்பதற்கான லேடிஜென்ஸ்கயாவின் முறைகள் ஆழ்ந்த செல்வாக்குடன் இன்றைக்கும் இருக்கின்றன. 1959 முதல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கணிதவியல் சங்கத்தின் உறுப்பினர், மேலும் 1990 முதல்ல் அதன் தலைவராக ஆனார். கணிதத்திற்கு அப்பால், அவர் இயற்கையும் வெகுவாக விரும்பினார்.

பல சர்வதேச பல்கலைகழங்கில் இவருக்கு தனியான அங்கீகாரம் வழங்கப்பட்டது, 2002 ஆம் ஆண்டில் ரஷ்ய அகாதமி ஆஃப் சயின்ஸ் (Russian Academy of Sciences) மூலம் கணித உலகில் இவரது பங்களிப்புகளுக்கு என ”லொமோனோசோவ் தங்கப் பதக்கம்” இவருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு கணித சாதனைகளை படைத்த இவர் ஜனவரி 12, 2004 ஆம் ஆண்டில் தனது 81வது வயதில் ஆல்கா லேடிசென்ஸ்கயா மறைந்தார்.

தொடர்ந்த புதிய தொழில்துட்ப செய்திகளை வாசிக்க மற்றும் எங்களை ஃபேஸ்புக்கில் பினபற்றற Facebok.com/gadgetstamilan