கூகுள் டூடுல் கொண்டாடும் செர்ஜி ஐசென்ஸ்டைன் பற்றி அறிவோம்இன்றைய கூகுள் டூடுல் சோவியத் நாட்டின் பிரபலமான  திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத்தை தொகுப்பதில் வல்லவரான செர்ஜி ஐசென்ஸ்டைன் அவர்களின் 120 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் படச்சுருள்களை பின்புலமாக கொண்டு டூடுல் சித்தரத்தை கூகுள் முகப்பில் வெளியிட்டுள்ளது.

செர்ஜி ஐசென்ஸ்டைன்

கூகுள் டூடுல் கொண்டாடும் செர்ஜி ஐசென்ஸ்டைன் பற்றி அறிவோம்

1898 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த ஐசென்ஸ்டைன் ஆரம்ப காலத்தில்  போல்ஷ்விக் புரட்சிக்கு வித்திட்ட ரெட் ஆர்மியில் பணியாற்ற தொடங்கினார், அதன் பிறகு சினிமா திரையரங்குகளில் வடிவமைப்பாளர் பணியை மாஸ்கோவில் தொடங்கினார்.

1923 ஆம் ஆண்டு திரைப்பட கொள்கையாளராக வாழ்க்கையை தொடங்கிய இவர், முதன்முறையாக 1925 ஆம் ஆண்டு முதல் ஊமைபடத்தை Strike என்ற பெயரில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து இவரது Battleship Potemkin’,மற்றும் ‘The General Line ஆகிய திரைப்படங்கள் மிகவும் பிரசத்தி பெற்றதாக விளங்கியது.

இன்றைய கூகுள் டூடுல் ஐசென்ஸ்டைன் அவர்களின் 120-வது ஆண்டு பிறந்த நாளை அவருடைய படத்தை பின்புலமாக கொண்டு ரீல்களுடன் வடிவமைத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here