ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள உலகின் முதல் மின்னணு இசை ஸ்டூடியோ (Studio for Electronic Music) என அறியப்படுகின்ற 66 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

எலக்ட்ரானிக் இசை ஸ்டுடியோ

ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் நகரில் வெஸ்ட் ஜெர்மன் ரேடியோ சார்பில் அக்டோபர் 18, 1951 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இசை சார்ந்த துறைக்கு மிகப்பெரிய புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது.

உலகின் முதல் மின்னணு சார்ந்த வகையில் இசைக்கு என அமைக்கப்பட்ட முதல் ஸ்டூடியோவில் பல்வேறு விதமான வகையில் பாடலை பதிவு செய்ய இசையமைப்பாளர்கள் மற்றும் தயாராப்பாளர்களுக்கு மிக உதவிகரமாக அமைந்திருந்தது.

பிரபலமான இசையமைப்பாளர்களான வெர்னர் மேயெர்-எப்பிளர், ராபர்ட் பேயர், மற்றும் ஹெர்பர்ட் ஈமீர்ட் போன்றவர்களுக்கு இந்த ஸ்டூடியோ இசைக்கலவையை மேற் கொள்ள முக்கிய பங்காற்றியது.

2000 ஆம் ஆண்டு வரை முழுமையான பயன்பாட்டில் இருந்த மின்னணு இசை ஸ்டூடியோவினை மையமாக கொண்டு 66வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள கூகுள் டூடுலில் பெர்லினை சேர்ந்த கிராபிக்ஸ் டிசைனர் ஹென்னிங் வாகன்ப்ரெத் வடிவமைத்து கொடுத்துள்ளார்.