இன்றைய கூகுள் தேடுதளத்தின் முகப்பை இன்றைக்கு தொடங்க உள்ள உலகின் மிக பழமையான விளையாட்டுகளில் ஒன்றான டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் ஆட்டத்தை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

140-வது விம்பிள்டன் டென்னிஸ் - கூகுள் டூடுல்

விம்பிள்டன் டென்னிஸ்

முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ஜூன் 9 , 1877 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுடன் 140 வது ஆண்டினை நிறைவு செய்வதனை கொண்டாடும் வகையில் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தின் போட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பகளுக்கு மத்தியில் ஜூலை 3 முதல் ஜூலை 16ந் தேதி வரை லண்டனில் நடைபெறுகின்றது. இன்றைக்கு இந்த தொடரில் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர் முதல் போட்டியில் உக்ரைன் வீரர் அலெக்சாண்டர் டோல்கபோலோவ் – ஐ எதிர்கொள்ள உள்ளார்.

பெண்கள் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா ஆகியோர் பங்கேற்கவில்லை என்பதனால் இந்த முறை பட்டம் வெல்லப்போவது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக அதிகரித்துள்ளது.

140-வது விம்பிள்டன் டென்னிஸ் - கூகுள் டூடுல்

ஆண்கள் பிரிவில் ஃபெடரர் இத்தொடரில் வென்றால் அது ஃபெடரரின் 8வது விம்பிள்டன் பட்டமாக இருக்கும். உலகின் அதிகபட்ச பட்டம் வென்ற வீரராக ஃபெடரர் விளங்குவார். ஆனால் முக்கிய போட்டியாளர்களான ஆண்டி முர்ரே, நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால் போன்றோருடன் கடுமையாக போராட வேண்டி நிலையில் உள்ளார்.