இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜர்னலிஸ்ட் என்ற பெருமைக்குரிய  ஹோமாய் வியாரவல்லா (Homai Vyarawalla) அவர்களின் 104 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹோமாய் வியாரவல்லா கூகுள் டூடுல்

உலகின் முன்னணி தேடுதல் தளமான கூகுள் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை கவுரவிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டு வரும் நிலையில் இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கை போட்டோகிராபரை கவுரவிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகை பட கலைஞர் என போற்றப்படும் ஹோமாய் வயரவாலா குஜராத் மாநிலத்தில் நவ்சாரி என்ற இடத்தில் 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி பிறந்தார். தனது 13 வயது முதல் கேமரா லென்ஸ் மீது ஆர்வம் கொண்ட ஓமாயி வியாரவாலா அவர்களின் கார் எண் DLD 13, அவரின் பிறந்த வருடம் 1913 எனவே இவரை செல்லமாக டால்டா 13 என அழைப்பபார்கள்.

இவர்களது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில் அங்குள்ள ஜே.ஜே.காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் பெயின்ட்டிங்கில் பட்டயப் படிப்பை முடித்தார்.  தன்னுடைய கணவரான மானக்ஷா வயரவாலாவை கல்லூரி காலத்தில் சந்தித்தார். மேலும் இவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் அளித்த ஊக்கத்தினால் புகழ் பெற்ற பத்திரிகை புகைபட கலைஞராக திகழ்ந்தார்.

வரலாற்று நிகழ்வுகளை தனது கேமரா கண்களில் பதிவு செய்த பெருமைக்குரிய  இவர், இந்தியா -பாக்., பிரிவினையின் போது முகம்முது அலி ஜின்னாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது மற்றும் திபெத்தில் இருந்து 1956-ல் தலாய் லாமா இந்தியாவிற்கு வரும் போது அவரை சந்தித்தது, வுன்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற தருணம், பிரதமர் பதவியேற்ற பின் நேரு நிகழ்த்திய உரை, வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய வருகைகள், பிரிட்டிஷ் ஹை கமிஷனரின் மனைவிக்கு நேரு சிகரெட் பற்றவைக்கும்போது ஹோமாய் எடுத்த படம்  போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

இவருக்கு இந்திய அரசு மிகப்பெரிய கவுரமாக கருதப்படும் பத்ம விபூஷன் விருதினை 2011 ஆம் ஆண்டு வழங்கியது.

புகழ்பெற்ற கலைஞராக திகழ்ந்த ஹோதாய் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி தனது 98-வது வயதில் காலமானார். இன்று டிச.,9 அவரது 104-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அவரை கவுரப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் திரு ராஜேந்திர பிரசாத் அவர்கள் பதிவியேற்பு நிகழ்வு
தலாய் லாமா இந்தியா வருகை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here