வி.சாந்தாராம் 116-வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்இந்தியத் திரைப்படத் துறையில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை கொண்டு செல்வதற்கு வழிகாட்டிய இந்தி திரைப்பட இயக்குநர் வி.சாந்தாராம் அவர்களின் 116வது பிறந்த நாளை டூடுல் வாயிலாக கூகுள் கொண்டாடுகின்றது.

வி.சாந்தாராம்

வி.சாந்தாராம் 116-வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்

திரைப்பட இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக அடையாளத்தை பெற்ற வி. சாந்தாராம் நவம்பர் 18, 1901 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் பிறந்தவர்.

சினிமா மீது தீராத பற்று கொண்டிருந்த சாந்தாராம் அவர்கள் தன்னுடைய 16 வயதில் மாதம் ரூ.5 சம்பளத்திற்கு சினிமா கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். சினிமா தயாரிப்பு, ஆய்வுக்கூட வேலை, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் போன்ற நுட்பங்களை அறிந்து கொண்ட இவர் 1929 ஆம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து திரைப்பட தயாரிப்பு கம்பெனியை தொடங்கினார்.

ஊமைப் பட காலத்திலே படங்களை இயக்க தொடங்கிய இவர் 6 மவுன திரைப்படங்களை இயக்கிருந்தார். 1932 ஆம் ஆண்டு ராஜா ஹரிச்சந்திரா கதையை பின்னணியாக கொண்ட ” அயோத்யா கா ராஜா ” என்ற படத்தில் முதனுன்முறையாக பெண்களை திரையில் அறிமுகம் செய்வதர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

இவருடைய தோ ஆங்க்கே பாரஹ் ஹாத்’ திரைப்படம் தமிழில் பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வெள்ளிக் கரடி’ விருது பெற்றது. மேலும் இவரது அப்னா தேஷ்’ படத்தை ‘நம் நாடு’ என்ற பெயரில் தமிழில் வெளியாகியது.

வி.சாந்தாராம் 116-வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்

1959 ஆம் ஆண்டு இவர் தயாரித்த இந்தியாவின் முதல் கலர் திரைப்படம்  ” ஜனக் ஜனக் பாயல் பாஜே ” இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. மேலும் இவருடைய பர்சாயின், ஆத்மி, சகுந்தலா, தஹேஜ், படோசி, சந்திரசேனா, அமிர்தமந்தன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களாகும்.

பல்வேறு சாதனைகளுக்கு படைத்த சாந்தாராம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, 1985-ல் தாதா சாஹேப் பால்கே விருது, 1992-ல் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். 60 ஆண்டுகாலத்துக்கு மேலாக திரையுலகில் தனித்தன்மை கொண்டு விளங்கிய வி.சாந்தாராம் அவர்கள் 1990 ஆம் ஆண்டு தனது 88-வது வயதில் காலமானார்.

இன்றைய கூகுள் டூடுல் இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் சாந்தாராம் அவர்களின் திரைப்படம் மற்றும் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here