கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டி-யை கொண்டாடும் கூகுள் டூடுல்மை ஸ்டோரி அல்லது என் கதை என்ற பெயரில் கமலா தாஸ் எழுதிய சுயசரிதை பல்வேறு சர்ச்சைகளுக்கு பெற்றதாக விளங்கியது. ஆங்கிலம் மற்றும் மலையாளம் என இரண்டு இலக்கிய உலகிலும் மிக சிறந்த நிறன் கொண்டவராக அறியப்பட்ட கமலா தாஸ் அவர்களின் சுயசரிதை வெளிவந்த நாளை கூகுள் டூடுல் கொண்டாடுகின்றது.

கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டி

கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டி-யை கொண்டாடும் கூகுள் டூடுல்

பிப்ரவரி 1, 1934 ஆம் ஆண்டு கேரளாவில் நாலப்பாட்டு தறவாட்டில் பிறந்த இவருடைய தந்தை வி.எம். நாயர் ‘மாத்ருபூமி’ நாளிதழின் இயக்குநர் மற்றும் தாயார் பாலாமணியம்மா ஒரு கவிஞர் ஆவர். இவருடைய 15 வயதிலே மோகன் தாஸ் எனும் வயது முதிர்ந்த நபருடன் திருமணம் நடைபெற்றது.

மலையாள இலக்கிய கலை உலகில் மாதவிக்குட்டி என்ற பெயரிலும், ஆங்கில உலகில் கமலா தாஸ் என்ற பெயரிலும் அறியப்பட்ட இவர் ரசிகர்களால் ஆமி என்றும் அழைக்கப்பட்டார்.

மலையாள நாடு என்ற வார இதழில் தன்னுடைய சுயசரிதையை ‘என்டெ கத’ (என் கதை) என்ற பெயரில் தொடராக இவர் எழுதத் தொடங்கினார். பிறகு அது மலையாளத்தில் ‘என்டெ கத’ என்ற பெயரி்ல்  1976-ம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது. ‘மை ஸ்டோரி’ (My Story) என்ற பெயரில் ஆங்கிலத்தில் ‘தி கரண்ட்’ வார இதழில் தொடராக எழுதியது 1977-ம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது.

இவருடைய சுயசரிதை மிக கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க காரணம், இவர் நிதர்சனமான உண்மையை பதிவு செய்தார், இவருடைய மலையாள சுயசரிதையை விட ஆங்கில சுயசரிதை மிக கடுமையான எதிர்ப்பினை சந்தித்தது. ஆங்கிலம் பேசினாலும் மலையாளத்தில் பேசினாலும் மரபான இந்திய மனம் ஒரே மாதிரித்தான் இருந்தது” என்ற கமலா தாஸின் இந்த வாசகங்கள் பல உண்மைகளை உணர்த்துகின்றன.

இவருடைய சுயசரிதை சமூக கட்டுப்பாடுகளை மிக கடுமையான வார்த்தைகளால் , பெண்கள் மீது புகுத்தப்படுகின்ற கலாச்சாரம், மரபு, ஒழுக்க நெறி போன்றவற்றை பற்றி குறிப்பிட்டிருந்தார். இவருடைய என் கதை சுயசரிதையை மலையாளத்திலிருந்து தமிழில் நிர்மால்யா மொழிபெயர்த்திருக்கிறார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள புனே நகரில் மே 1, 2009 ஆம் ஆண்டு மரணத்தை தழுவினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here