இன்றைய நவீன மருத்துவம் சார்ந்த பயன்பாட்டு கருவிகளுக்கும், லேசர் மற்றும் தனிநபர் கணினி பயன்பாட்டிற்கு வழிவகுத்த குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி ஆய்வை மேற்கொண்ட இயற்பியிலாளர் மேக்ஸ் பார்ன் அவர்களின் 135-வது பிறந்த தினமாகும்.

மேக்ஸ் பார்ன்

ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள பிரஸ்லாவில் 11ந் தேதி டிசம்பர் மாதம் 1882 ஆம் ஆண்டு பிறந்தார். இயற்பியில் மற்றும் கணிதம் சார்ந்த துறைகளில் மிகுந்த திறன் பெற்றிருந்த மேக்ஸ் குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையில் மேற்கொண்ட ஆய்வுகளின் நவீன கால வளர்ச்சியே மருத்துவத் துறை பயன்பாட்டிற்கான எம்.ஆர்.ஐ ஸ்கேன், லேசர் மற்றும் தனிநபர் கணினி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றினார்.

பார்ன் அவர்கள் உருவாக்கிய பார்ன் விதி வாயிலாக குவாண்டம் தியரி பயன்பாட்டிற்கு கணித நிகழ்தகவு வாயிலாக அலைகளில் துகள்களின் இருப்பிடத்தை அறிய உதவினார். இந்த பார்ன் விதி உருவாக்கியதற்காக 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இன்றைய கூகுள் டூடுல் மேக்ஸ் பார்ன் அவர்களை கவுரவிக்கும் வகையில் பேப்பர், சமன்பாடுகள், அலை செயல்பாடு ஆகியவற்றை பின்புலமாக கொண்டு கேலி சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது.