இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ள கூகுள் டூடுல்,  மொலியரே (Moliere) பிரபலமான நடிகர் மற்றும் நாடக ஆசிரியராக விளங்குகினார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த மொலியர் ஜனவரி 15ந் தேதி 1622 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இறுதி நாடகம் The Imaginary Invalid வெளியான தினத்தை முன்னிட்டு டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

இதே நாளில் 1673 ஆம் ஆண்டு இவர் நடித்து இயற்றிய இறுதி நாடகமான The Imaginary Invalid வெளிப்படுத்தியதை முன்னிட்டு வெளியிடப்பட்டள்ள சிறப்பு டூடுல் கூகுளின் முகப்பு பக்கத்தை அலங்கரித்துள்ளது. இன்றைய பிரெஞ்சு காமெடி நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இவர் விளங்குகின்றார்.

நகைச்சுவை மற்றும் கேலியான கதைகளை கொண்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய பெருமைக்குரிய மொலியரே வெளியிட்ட மதம் சார்ந்த நையாண்டி டார்பூஃப் 1664 இல் முதன்முதலில் அரங்கேற்றினார். ஆனால் உடனடியாக கிங் லூயிஸ் XIV நீதிமன்றத்தின் உத்தரவால் தடை செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகளக்கு பிறகு இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இவருடைய School for Wives, Don Juan, மற்றும் The Miser போன்றவை பிரசத்தி பெற்ற நாடங்களாக விளங்குகின்றது. மொலியரே பிப்ரவரி 17, 1673 ஆம் ஆண்டு இறந்தார்.