கூகுள் டூடுல் கொண்டாடும் ராபர்ட் கோச் பற்றி அறிவோம்தேடுதல் தலைவன் கூகுள் முகப்பு பக்கத்தை அலங்கரித்துள்ள இன்றைய டூடுல் காச நோய் தொடர்பான ஆய்வுக்காக நோபல் பரிசு வென்ற ராபர்ட் கோச் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ராபர்ட் கோச்

கூகுள் டூடுல் கொண்டாடும் ராபர்ட் கோச் பற்றி அறிவோம்

ஜெர்மனி நாட்டில் 1843 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி ராபர்ட் கோச் பிறந்தார். மருத்துவ துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கோச் நுண்ணியிர் சார்ந்த ஆய்வுகளில் மிகுந்த திறன் கொண்டவராகவும் நவீன பாக்டீரியாக்களைப் பற்றிய ஆய்வின் முன்னோடியாக விளங்கினார்.

இவருடைய ஆய்வுகளில் மிக முக்கியமானதான மிக கொடூரமான நோய்களான  பாசில்லஸ் ஆந்த்ராசிஸ், காச நோயை உருவாக்கும் நுண்ணியர் மற்றும் கொள்ளை நோய் என அறியப்படுகின்ற காலாரா ஆகியவற்றின் நுண்ணியிர்களை வேறுபடுத்திக் காட்டினார்.

1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர் தொடர்பான ஆய்வில் முக்கியமான சில முடிவுகளை கண்டறிந்து அதற்கான மருந்தினை உருவாக்கினார், இதற்காக இவரை கவுரவுப்படுத்தும் வகையில் 1905 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் இவர் மிக கொடூரமான ஆந்திராக்ஸ் நோய் தொடர்பான ஆய்வில் ஊசி மூலம் எலிகளுக்கு செலுத்தி சோதனை செய்தார். இந்த ஆய்வின் முடிவில் எலிகளுக்கு இந்தக் கிருமிகளை ஊசி மூலம் செலுத்தினால் ஆந்த்ராக்ஸ் ஏற்படுவதை உறுதிப்படுத்தினார்.

இன்றைய டூடுல் ராபர்ட் கோச் அவர்கள் ஆய்வுக்காக உருளை கிழங்கினை கொண்டு பாக்ட்ரியாக்களை அறிய பயன்படுத்திய முறையை பின்பற்றி டுடுல் வெளியிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here