ருக்மாபாய் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் முதல் பெண் மருத்துவராக பயிற்சி பெற்ற ருக்மாபாய் ராவத் அவர்கள் மும்பையில் (பம்பாய்) நவம்பர் 22, 1864 ஆம் ஆண்டு பிறந்தார்.

டாக்டர் ருக்மாபாய்

ருக்மாபாய் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்

தற்போது மும்பை என அழைக்கப்படுகின்ற பம்பாய் நகரில்1864 ஆம் ஆண்டு பிறந்த ருக்மாபாயின் 11 வயதில் 19 வயதான தாதாஜி பிகாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் ரக்மாபாய் தன்னுடைய கணவருடன் வாழாமல் தனது தாயின் இல்லத்தில் தங்கியே படிப்பை தொடர்ந்து வந்தார், இதனால்  பிகாஜியோ, தன் மனைவியைத் தன்னுடன் சேர்ந்து வாழ ஆணையிட வேண்டும் என்று 1884- யில் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கீழ்நீதிமன்றம் ரக்மாபாயிற்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. உடனே, இந்துமத வாதிகளும், பாலகங்காதர திலகர் போன்ற தேசிய வாதிகளும் கொதித்தெழுந்தனர்.

பிகாஜிக்கு ஆதரவாகப் பெரும் நிதி திரட்டப்பட்டு பம்பாய் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் ஆணையின்படியும் பிகாஜியுடன் சேர்ந்து வாழ ரக்மாபாய் மறுத்துவிட்டார். ரக்மா பாய் கைது செய்யப்பட்டதுடன் 6 மாத சிறை தண்டனையுடன் அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், இந்துச் சட்டப்படி, அவர் மறுமணம் செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டது.

மீண்டும் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 2000 ரூபாய் அபராதத்துடன் விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து ஆங்கிலேய அரசு குழந்தைகள் திருமணத்திற்கு தடை விதிக்கும் சட்டத்தை இந்தியாவில் கொண்டுவந்தது.

கடுமையான போரட்டாங்களுக்கு பிறகு ராஜ்கோட்டில் உள்ள மகளிர் மருத்துவமனையில் சுமார் 35 ஆண்டுகள் மருத்தவராக பணியாற்றினார். தொடர்ந்து குழந்தை திருமண எதிர்ப்பு உட்பட பல்வேறு சமூக சீர்திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

ருக்மாபாய் ராவத் அவர்களை கௌவரவிக்கும் வகையில் 153 வது பிறந்த நாளில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அவரின் புகைப்படத்தை பின்னணியாக கொண்டு மருத்துவமனை வார்டுகளை கொண்டு வடிவமைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here