இந்தியா குடியரசு தினம் : சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

இந்தியா குடியரசு தினம் : நமது நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்றைக்கு வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மிகப்பெரிய இணைய ஜாம்பவான் கூகுள் தனது முகப்பில் இந்தியா குடியரசு தினம் என்ற பெயரில் அழகான சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியா குடியரசு தினம் : India Republic Day

நாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள சித்தரத்தில் மிக சிறப்பான முறையில் வடிவமைத்து அல்ஃபாபெட் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற கூகுள் வெகுவாக இந்திய மக்களின் மனதை கவர்ந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கும் டூடுல் வெளியிடுவது கூகிள் நிறுவன வழக்கமாகும்.

குடியரசு தலைவரின் ராஷ்டிரபதி பவன் இல்லத்தை பின்புலமாக கொண்டு இந்தியாவின் நிலம், நீர்வளம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்கின்ற தத்துவத்தை நினைவுப்படுத்தும் வகையில் இன்றைய குடியரசு தின கூகுள் டூடுல் அமைந்துள்ளது.

இந்தியா குடியரசு தினம் : சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

‘Google’ நிறுவனத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பின்புலத்தை தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளது. ‘G’ என்ற எழுத்தின் பின்புலத்தில் நீர் மற்றும் நிலவளத்தை இணைத்துள்ளது. ‘O’ என்ற எழுத்தில் பாரம்பரியம், மற்றொரு ‘O’ எழுத்தில் இந்திய கலை நுனுக்கத்தை குறிப்பிடுவதுடன், ‘G’ என்ற எழுத்தில் தேசிய பறவை மயில் மற்றும் யானை,  ‘L’ என்ற எழுத்தில் குதுப்மினார் ‘E’ என்ற எழுத்தில் குடியரசு தின விழாவில் நடைபெறுகின்ற அனிவகுப்பை குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு முதல் இந்திய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு 70 வது ஆண்டை இன்றைக்கு கொண்டாடி வருகின்றோம். அனைவருக்கும் இனிமையான குடியரசு தின வாழ்த்துக்களுடன்.., உங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் இணையதளம்…