இந்தியாவின் முதன்முறையாக அறிவியல் துறைக்கான பிரிவில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி என்ற பெருமைக்குரிய அசிமா சாட்டர்ஜி 100 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அசிமா சாட்டர்ஜி

 

அசீமா சாட்டர்ஜி 23 செப்டம்பர் 1917 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த இந்திய வேதியியலாளர். இவர் கரிம வேதியியலிலும் நிலைத்திணைசார் (தாவர) மருந்தியலிலும் கணிசமான பங்களிப்பு செய்துள்ளார். இவரின் குறிப்பிடதக்க ஆய்வின் பலனாக கை கால் வலிப்புத் தடுப்பு, மலேரிய காய்ச்சல் தடுப்பு மருந்துகளில் முக்கிய பங்களிப்பாக அமைந்தது. இவர் இந்தியத் துணைக்கண்ட மூலிகைகள் ஆய்வில் மிக பெரும்பணி ஆற்றியுள்ளார்.

அறிவியல் துறையில் இவர் செய்த சாதனைகளுக்காகப் பல உயரிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.பாட்நகர் விருது, சி.வி.ராமன் விருது, பி.சி.ரே விருது உட்பட இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதையும் இவர் பெற்றுள்ளார். பேராசிரியராக கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.

 

இன்று அறிவியில் பிண்ணியாக கொண்டு பச்சை நிறந்துடன் அவருடைய உருவத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய முகப்பு அமைந்துள்ளது.