Arthi Saha : ஆசியாவின் முதல் ஆங்கில கால்வாயை கடந்த பெண்மனி ஆராதி சஹா

இன்றைக்கு டூடுல் வாயிலாக கூகுள் கௌரவித்துள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த ஆராதி சஹா (Arati Saha) அவர்களின் 80வது பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது. 67 கிமீ (42 மைல்) தொலைவை கடந்த முதல் ஆசியா பெண்மனி என்ற பெருமைக்குரியர் ஆவார்.

ஆரத்தி சஹாவின் தந்தை பஞ்சுகோபால் சஹா ஆயுதப்படைகளில் ஒரு சாதாரண ஊழியராக இருந்தார். இவருக்கு மகளாக 24-09-1940 பிறந்தார். இரண்டரை வயதில் தன் தாயை ஆரத்தி இழந்தார். அவர் தனது மாமாவுடன் சென்று ஹூக்லி நதியில் நான்கு வயதில் நீச்சல் கற்றுக் கொள்ள தொடங்கினார். தனது 5 வயதில் நீச்சல் போட்டிக்கு முதன்முறையாக தங்கம் வென்ற ஆராதி, தனது 11 வது வயதில் நீச்சல் மேதையாக அறியப்பட்டார்.

தனது 18 வயதில் ஆங்கில கால்வாயை கடக்கும் முயற்சியில் தோல்வியை தழுவினார். அடுத்த ஒரே மாதத்தில் இரண்டாவது முயற்சியில் செப்டம்பர் 29, 1959 அன்று, ஆங்கில சேனலைக் கடக்கும் முதல் ஆசிய பெண் என்ற பெருமையைப் பெற்றார். பிரான்சின் கேப் கிரிஸ் நெஸிலிருந்து இங்கிலாந்தின் சாண்ட்கேட் வரை 42 மைல் தூரம் நீந்தினார்.

ஆராதி சஹா, 1959 ஆம் ஆண்டில், டாக்டர் பிதன் சந்திர ராயின் மேற்பார்வையில், டாக்டர் அருண் குப்தாவை மணந்தார். இவருக்கு அர்ச்சனா என்ற மகள் உள்ளார். ஆகஸ்ட் 4, 1994 அன்று, அவர் மஞ்சள் காமாலை மற்றும் என்செபாலிடிஸ் (மூளையில் ஏற்படும் வீக்கம்) நோயுடன் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 19 நாட்கள் நோயுடன் போராடிய அவர், ஆகஸ்ட் 23, 1994 அன்று அவர் இறந்தார்.

ஆரத்தி சஹாவுக்கு 1960 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டில், இந்திய அஞ்சல் துறை தபால் தலை வெளியிட்டு கொண்டாடியது.