இன்றைய கூகுள் டூடுல் சோரா சேகல் பற்றி அறிவோம்

இன்றைக்கு கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுலில் வடஇந்தியாவின் பிரபலமான  சோரா சேகல் அவர்கள் பாலிவுட்டின் நடிகையும், நடன இயக்குநரும் ஆவார். இந்தி மட்டுமல்லாமல் சில ஆங்கில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சர்வதேச அளவிலான திரைப்பட துறையில் இந்திய நாட்டின் மிகவும் போற்றப்படும் முதல் நடிகையாக விளங்குகின்றார்.

சோரா மும்தாஸ் சேகல் ஏப்ரல் 27, 1912 அன்று உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் சாஹிப்ஸாதி ஜோஹ்ரா மும்தாசுல்லா கான் பேகமாக பிறந்தார். ஒரு வயதில் கண்ணில் ஏற்படுகின்ற பசும்படலம் (glaucoma) நோயால் பாதிக்கப்பட்டபோது இடது கண்ணில் பார்வை இழந்தார். அவர் பர்மிங்காமில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு அவர் £ 300 செலவில் சிகிச்சை பெற்றார்.

சோரா சேகல் 1962 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். அடுத்த தசாப்தங்களில் பிரிட்டிஷ் தொலைக்காட்சி கிளாசிக் தொடர்களான “டாக்டர் ஹூ” மற்றும் 1984-ல் வெளியான “தி ஜுவல் இன் தி கிரவுன்” போன்ற பாத்திரங்களுடன் ஒரு சர்வதேச அடையாளத்தை உருவாக்கினார்.

1990 களின் மத்தியில், மீண்டும் அவர் இந்தியா திரும்பினார், அங்கு அவர் மேடையில் மற்றும் பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்தார். 2002 ஆம் ஆண்டில், தனது 90 வது வயதில் “பெண்ட் இட் லைக் பெக்காம்” திரைப்படத்தில் தனது மறக்கமுடியாத பாத்திரத்தில் தோன்றினார்.

1998 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஶ்ரீ விருதும், 2001 ஆம் வருடத்தில் இவருக்கு காளிதாஸ் சம்மன் விருதும், 2004 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருதும் வழங்கப்பட்டது. சோரா சேகல் வாழ்நாள் சாதனைக்காக சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருதும் வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விருதான பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது