யார் இந்த செலினா குவிண்டனிலா - கூகுள் டூடுல்இன்றைய கூகுள் முகப்பில் இடம்பெற்றுள்ள டூடுல் பிரபலமான மெக்சிகன்-அமெரிக்க இசை மற்றும் பொழுதுபோக்கு அடையாளமாக விளங்கிய செலினா குவிண்டனிலா அவர்களின் சாதனையை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

செலினா குவிண்டனிலா

தேஜனோ இசை ராணி என்ற பெருமைக்குரிய செலினா ஏப்ரல் 16, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். தேஜனோ இசை எனப்படும் பிரிவில் கிராமிய விருதை முதல் பெண் பாடகியாகவும், பிரபலமான பாடகியாகவும் விளங்கியவர் செலினா ஆகும்.

ஆண்களின் ஆதிக்கம் மிக்க இசை பிரிவில் மிக கடுமையான சவால்களை எதிர்கொண்ட செலினா தனது திறமையினால் எண்ணற்ற ரசிகர்களின் மத்தியில் தனது நீங்காத முத்திரையை பதித்த இவர், 1993 ஆம் ஆண்டில் மெக்சிகன் / அமெரிக்க ஆல்பம் பிரிவில் முதல் கிராமிய விருதை வென்ற தேஜானோ இசை பெண் மற்றும் குறைந்த வயது கொண்டவர் என்ற பெருமையை பெற்றவர்.

இசை மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர், ஆர்விமிக்க தொழில் முனைவர் மற்றும் ஃபேஷன் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கியவராகும். தனது 23 வயதுக்குள் மிகவும் பிரபலமான பாடகியாக விளங்கிய செலினா 1995 ஆம் ஆண்டு சுட்டுக் கெல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here