வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சி

397 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய நிகழ்வான வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சிக்கு கிடைக்க உள்ள பெரும் ஒருங்கமைவு (Great Conjunction) நிகழ்வு 21 ஆம் தேதி மாலை சூரியன் மறைவுக்கு பின்னர் மேற்கு வானில் புள்ளியாக தெரியக்கூடும்.

பொதுவாக இரு கோள்களுக்கு இடையிலான ஒருங்கமைவு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடியதாகும், ஆனால், இப்போது வரக்கூடிய இந்த அரிய நிகழ்வு கடந்த 1623 ஆம் ஆண்டு அதாவது சுமார் 397 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்று. பொதுவாக நாம் வெறும் கண்களில் பார்க்கும் போது மிக அருகாமையில் உள்ளதாக தெரிய உள்ளது. ஆனால் இரு கோள்களுக்கு இடையிலான இடைவெளியின் தொலைவு 74 கோடி கிலோ மீட்டருக்கு கூடுதலாக அமைந்திருக்கும்.

great conjuction

வியாழன் (Jupiter) கோள் பூமியிலுருந்து சராசரியாக 88.6 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சனி (Saturn) கோளானது பூமியிலுருந்து சராசரியாக 162 கோடி கிலோ மீட்டர் அமைந்திருக்கின்றது.

வெறும் கண்ணால் வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சி அபூர்வ நிகழ்வால் எந்த பாதிப்பும் ஏற்படாது.