Sundar Pichai : சுந்தர் பிச்சை மீது நம்பிக்கை இழந்த கூகுள் ஊழியர்கள்

இணைய உலகின் ஜாம்பவான் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மீதான நம்பிக்கை குறைய தொடங்கியுள்ளதாக கூகுள் ஊழியர்களிடைய நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 74 சதவீத மட்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர பிச்சை, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் மிக மோசமான மதிப்பீடாக கருதப்படுகின்றது.

சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் ஆல்ஃபாபெட் நிறுவனம் ஈட்டிய சாதனை தங்களுக்கு ஊக்கமளிப்பதாக 78 சதவிதம் பேர் மட்டும் கூறியுள்ளனர். இது கடந்த ஆண்டுன் ஒப்பிடுகையில் 10 சதவிதம் குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பிச்சையின் தலைமையில் கூகுளை முன்னெடுத்துச் செல்ல தயாரா? என்ற கேள்விக்கு 74 சதவீதம் ஊழியர்கள் ஆதரவளித்துள்ளனர். ஆனால், இந்த கணக்கெடுப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவு , முந்தைய ஆண்டில் 92 சதவீதம் என ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

சுந்தர் பிச்சை எடுக்கும் முடிவுகள், உத்திகளுக்கு 75 சதவீதம் ஆதரவாக உள்ளனர்.ஆதரவு அதிகமாக உள்ள போதும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்திருப்பது ஆல்ஃபாபெட் நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தில் எழுந்த பாலியல் தொடர்பான குற்றங்களும் , அதன் மீது சுந்தர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே ஊழியர்கள் நம்பிக்கை இழக்க காரணமாக அமைந்துள்ளது.