ஜோஹன் செபாஸ்டியன் பாக்

ஜெர்மனி நாட்டில் பிறந்த ஜோஹன் செபாஸ்டியன் பாக் , அவர்கள் சிறந்த இசையமைப்பாளரும் , ஹார்மனிய இசைக் கலைஞரும் ஆவார். இவருடைய 334 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் சிறப்பு என்னவென்றால் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ( AI-powered) எனப்படும் செயற்கை அறிவுத்திறன் பின்பற்றி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் டூடுல் ஆகும்.

கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுலில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறனை வழங்க, இந்நிறுவனத்தின் கூகுள் மெக்னட்டா மற்றும் கூகுள் பேர் நிறுவன குழுக்கள் பணியாற்றி சிறப்பான இந்த டூடுலை வெளியிட்டு அசத்தியுள்ளது.

ஜோஹன் செபாஸ்டியன் பாக் பிறந்த நாள்

ஜெர்மனி நாட்டின் எயசெனாக் என்ற சிறிய நகரத்தில், 21 மார்ச் 1685 இல்  பாக் இசைக்குடும்பத்தில் பிறந்த இவருக்கு இசையின் மீது இயல்பாகவே பற்று இருந்தது. இவரது தந்தை பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கும் திறனுடன் அந்த பகுதியின் இசை குழுமத்தின் தலைவராக விளங்கினார்.

ஜோஹன் செபாஸ்டியன் பாக்

பாக் அவர்கள் இசைக் கலைஞராக விளங்கிய நிலையில், அவர் பெரிதும் போற்றப்படாதவராகவே இருந்தார். ஆனால் அவர் மறைந்த பிறகு அவருடைய கம்போஸ் செய்த 306 இசைக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கினார்கள் என்பதே உண்மையாகும். பீத்தோவன் அவர்களுக்கு இணையாக பாக்கின் இசையின் திறன் கருதப்படுகின்றது. அவருடைய கண்ணில் ஏற்பட்ட கோளாறுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் மரணம் அடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது. ஜுலை 28, 1750 ஆம் ஆண்டு, பாக் தன்னுடைய 65 -வது வயதில் இயற்கை எய்தினார்.

கூகுளின் முதல் செயற்கை அறிவுத்திறன் டூடுல் சிறப்பு

வரும் காலத்தில் செயற்கை அறிவுத்திறன் என்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான டெக் நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் கூகுள் முக்கிய நிகழ்வுகளுக்கு வெளிப்படுத்தும் டூடுல் எனப்படுகின்ற சித்திரத்திற்கு செயற்கை அறிவுத்திறனை புகுத்தியுள்ளது.

இயந்திர கற்றல் (மெஷின் லெர்னிங்)  எனப்படும் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டூடுல், பொதுவாக பாரம்பரிய கணினி முறையில் நிரல் ஆக்கத்தில் குறிப்பிட்ட பதில்களை மட்டும் வழங்கும், ஆனால் இயந்திர கற்றல் முறையில், கணினி ஒரு குறிப்பிட்ட பதிலை மட்டும் வழங்காமல் , தனது சொந்த அறிவாற்றலால் பல்வேறு கூடுதல் விபரங்களை எடுத்துக்காட்டு மூலம் வழங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

கோகோனெட் (Coconet): எனப்படுவது ஒரு பரந்த அளவிலான இசைப் பணிகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு பல்வகை மாதிரி ஆகும். இதன் மூலம் இசையை உருவாக்க அல்லது இசை கீற்றுகளை உருவாக்க வழி வகுக்கும் முறையாகும். இந்த Coconet ஆதாரத்தை கொண்டு சுமார் 306 வகையான இசை மாதிரிகளை இந்த டூடுல் பெற்றுள்ளது.

அனேகமாக இந்தியாவிற்கு இந்த கூகுள் டூடுல் கிடைக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம். ஹோலி 2019 பண்டிகை டூடுல் மட்டும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை ரசிக்க இங்கே காணலாம்  நேற்றைக்கு இந்த கூகுள் டூடுல் சர்வதேச அளவில் பலநாடுகளில் கிடைத்த நிலையில் இன்றைக்கு (மார்ச் 22) இந்தியாவில் தெரிகின்றது.

மேலும் இந்த கூகுள் டூடுல் உருவாக்க பின்னணி வீடியோவை இங்கே காணலாம்.