கூகுளுக்கு 462 கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பியா

கூகுள் : ஐரோப்பாவின் GDPR எனப்படும் தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான விதிமுறைகளை மீறியதால் அதிகபட்சமாக ரூ.462 கோடியை அபராதமாக பிரான்ஸ் விதித்துள்ளது.

கூகுளுக்கு 462 கோடி அபராதம்

General Data Protection Regulation எனப்படும் பொதுத் தரவுகள் பாதுகாப்பு நெறியாண்மை என்ற சட்டம் ஐரோப்பா யூனியனில் அமலில் உள்ளது. இந்த சட்டத்தால் தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கும் நோக்கில் அமைந்திருக்கின்றது.

ஜிடிபிஆர் விதிமுறைகள் கடந்த வருடம் மே 25ம் தேதி முதல் அமலில் இருக்கின்றது. இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றாத நிறுவனங்கள் 23.5 மில்லியன் டாலர்கள் அல்லது நிறுவனத்தின் லாபத்தில் 5 சதவீதம் வரை அபராதம் கட்ட வேண்டும் என்பதும் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சமாகும்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் செயல்படுகின்ற கூகுளில் , தனிநபர் விபரங்களை பாதுகாப்பின் விதிமுறைகளை காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம், மேற்கூறிய விதிமுறைகளை மீறியதாக கூறி அபராதம் விதித்துள்ளது. அதுவும் சுமார் 462 கோடி ரூபாய். ஒரு நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் எங்களுடைய ஜி.டி.பி.ஆர் விதிமுறைகள் தெளிவாக உள்ளதால், அபராதம் குறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.