கூகுள் பிளே ஸ்டோரில் 29 கேமரா ஆப்கள் நீக்கப்பட்டது

பிளே ஸ்டோரில் இடம்பெற்றிருந்த கேமரா ஃபில்டர் மற்றும் அழகுப்படுத்துதல் தொடர்பான 29 செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் 29 ஆப்களும் பயனாளர்கள் தகவலை திருடி விற்பனை செய்யதுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு பிளே ஸ்டோரில் பல்வேறு அம்சங்களை வழங்கும் ஆப்கள் இடம்பெற்றிருக்கின்றது. இவற்றில் புகைப்படத்தை அழகுப்படுத்துதல், கார்ட்டூன் படங்களாக மாற்றுவது உட்பட்ட பல்வேறு ஃபில்டர் தொடர்பான இருபத்தி ஒன்பது செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.

இந்த செயலிகள் பயனாளர்களின் தரவுகள் மற்றும் படம் உள்ளிட்ட விபரங்களை இலகுவாக திருடுவதற்கு கவர்ச்சிகலமான வழிகை பயன்படுத்தி, பெற்ற தகவலை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருக்க வாய்ப்புள்ளதாக டிரென்ட் மைக்ரோ தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நீக்கப்பட்ட செயலியில் இருந்த அதிகப்படியான தரவிறக்கம் ஆசியாவில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிகப்படியான தரவிறக்க செய்யபட்ட செயலிகளில் உட்பட நீக்கப்பட்ட செயிலிகளின் விபரம் பின் வருமாறு;- Pro Camera Beauty, Cartoon Effect, Art Effect, Photo Editor, Wallpapers HD, Magic Art Filter Photo Editor, Fill Art Photo Editor, Art Flip Photo Editing, Art Filter, Cartoon Art Photo, Artistic effect Filter, Art Editor, Beauty Camera, Selfie Camera Pro, Horizon Beauty Camera, Super Camera, Art Effects for Photo, Awesome Cartoon Art, Art Filter Photo, Art Filter Photo Effcts, Prizma Photo Effect, Cartoon Art Photo Filter, Art Filter Photo Editor, Pixture, Art Effect ,Photo Art Effect, Cartoon Photo Filter, Cartoon Art Photo மற்றும் Emoji Camera என 29 செயலிகள் இடம்பெற்றுள்ளது.