எலினா கார்னரோ பிசுகோபியா

உலகின் முதல் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி எலினா கார்னரோ பிசுகோபியா (Elena Cornaro Piscopia) 373 வது பிறந்தநாளை கூகுள் தனது முகப்பில் வெளியிட்டுள்ளது.

எலினா கார்னரோ ஜூன் 5, 1964 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டில் பிறந்தார். உயர்கல்வி பெற்ற முதல் பெண்மனி என்ற பெருமைக்குரியவர்.

எலினா கார்னரோ பிறந்த நாள்

உலகின் முதல் பட்டம் பெற்ற பெண்மனி என்ற பெருமையை பெற்ற எலினா சிறந்த மெய்யியலாளர் ஆவார். இவர் தனது 7 வயது முதல் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.

கல்வி மட்டுமல்லாமல் இசையிலும் யாழ், வயலின் வாசிப்பதிலும் சிறந்த திறனை பெற்றிருந்தார். எலினா பல்வேறு துறைகளில் மிக சிறப்பான திறனை பெற்றிருந்தார். குறிப்பாக அவர் கணிதம், வானியல், தத்துவம், இசை மற்றும் இறையியல் ஆகியவற்றைப் படித்து தனது திறனை மேம்படுத்திக் கொண்டார். இவர் கிரேக்கம், லத்தின் உட்பட பிரஞ்சு, ஸ்பானிஷ், மற்றும் ஹீப்ரு போன்ற மொழிகளையும் சேர்த்து மொத்தம் 7 மொழிகளை அறிந்திருந்தார்.

இவர் இறையியல் பற்றி மேற்கொண்ட பிஎச்.டி ஆய்வினை பெண் என்பதனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பிறகு அரிஸ்டாட்டில் எலினாவின் இறையியல் பற்றிய ஆய்வினை லத்தின் மொழியில் விரிவாக விளக்கி வெளியிட்டார். இதன் பிறகே இவருடைய முனைவர் பட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எலினா 26 சூலை 1684 ஆம் ஆண்டு தனது 38 வயதில் எலும்புருக்கி நோயின் காரணமாக மரணத்தை தழுவினார்.