கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டின் 2019 ஆம் ஆண்டிற்கான Google I/O டெக் நிகழ்வு மே 7, 2019 முதல் மே 9, 2019 வரை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மவுன்டெயின் வியூ-ல் நடைபெற உள்ளதாக கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
Google I/O 2019
கடந்த 2018 ஆம் ஆண்டு கூகுள் உருவாக்குநர் மாநாட்டில் AI எனப்படும் செயற்கை நுண்ணறவு சார்ந்த அம்சங்கள், ஆண்ட்ராய்டு பை, கூகுள் லென்ஸ், கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது 2019 ஆம் ஆண்டிற்கான டெவலெப்பர் மாநாடு தொடர்பான தேதியை கூகுள் சிஇஓ தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வரும் 2019 ஆம் ஆண்டின் நிகழ்வில் கூகுள் ஆண்ட்ராய்டு Q, அடுத்த தலைமுறை கூகுள் பிக்சல் 3 லைட் மொபைல், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மாற்றாக வரவுள்ள கூகுள் ஃப்யூசியா இயங்குதளம் தொடர்பான விபரங்கள் இந்த டெக் நிகழ்வில் வெளியிட கூகுள் தயாராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Glad the transmission was received:) See you at Shoreline Amphitheatre May 7-9 for this year's I/O! #io19 pic.twitter.com/CXWpQR4Eza
— Sundar Pichai (@sundarpichai) January 25, 2019
2019 கூகுள் டெவலப்பர் மாநாடு மே 7ந் தேதி தொடங்குகின்றது. இந்த நிகழ்வை நேரலையில் காண events.google.com/io/ மற்றும் யூடியூப் Youtube.com/GoogleDevelopers இயங்குதளத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கும்.