Google I/O 2019: ஆண்ட்ராய்டு Q, பிக்சல் 3a, ஸ்டேடியா, மேலும் பல.,

2019 ஆம் ஆண்டு Google I/O 2019 மாநாடு இன்றைக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்க உள்ளது. Google I/O ’19 -ல் பல்வேறு புதிய அறிமுகங்கள், மேம்பாடுகள், மென்பொருட்கள் மற்றும் வசதிகள் வெளியாக உள்ளது. மே 7 முதல் மே 9 ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது.

முற்பகல் 10 GMT-7 நேரப்படி தொடங்க உள்ள மாநாட்டினை இந்திய நேரப்படி இரவு 10.15 மணிக்கு நேரலையில் யூடியூப் வாயிலாக கண்டு மகிழலாம். இந்த மாநாட்டில் குறிப்பாக கூகுள் பிக்சல் 3a மற்றும்  பிக்சல் 3a எக்ஸ்எல், ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் , கூகுள் ஸ்டேடியா உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் வெளியாக உள்ளது.

Google I/O 2019 எதிர்பார்ப்புகள்

பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கூகுள் நிறுவனம் தொடர்ந்து தனது வருடாந்திர உருவாக்குநர்கள் மாநாட்டில் வெளியிட்டு வருகின்றது. இன்றைக்கும் பல்வேறு முக்கிய விபரங்களை வெளியிட உள்ளது.

ஆண்ட்ராய்டு Q இயங்குதளம்

தற்போது வரை இரண்டு முறை பீட்டா வெர்ஷன் வெளியாகியுள்ள அடுத்த பதிப்பான ஆண்ட்ராய்டு Q இயங்குளத்தில் வரவுள்ள முக்கிய விபரங்கள் உட்பட அறிமுகம் என பல்வேறு தகவல்களை இந்த மாநாட்டில் கூகுள் வெளியிட உள்ளது. கூகுள் இந்த முறை சிறந்த தனியுரிமை பாதுகாப்பினை வழங்கும் இயங்குதளமாக வெளியிட உள்ளது.

கூகுள் பிக்சல் 3a மற்றும்  பிக்சல் 3a எக்ஸ்எல்

பட்ஜெட்வ விலையில் கூகுள் வெளியிட உள்ள புதிய கூகுள் பிக்சல் 3a மற்றும்  பிக்சல் 3a எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதிகார்வப்பூர்வமாக இந்த மாநாட்டில் பிக்சல் 3ஏ வரிசை மாடல்கள் விலை மற்றும் விபரம் வெளியிடப்பட உள்ளது.

Google Pixel 3a and 3a XL
Google Pixel 3A And 3A Xl

கூகுள் ஸ்டேடியா

முன்பே அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேக விளையாட்டு சாரந்த ஸ்டேடியா கேமிங் பற்றி சந்தா விபரம், ஆன்லைன் கேம்கள் உட்பட பலதரப்பட்ட வசதிளை வெளியிட காத்திருக்கின்றது.

ஸ்மார்ட் இல்லங்களுகான கூகுள் நெஸ்ட் ஹப் மேக்ஸ், ஆண்ட்ராய்டு ஆட்டோமோட்டிவ் ஓஎஸ் மேம்பாடுகள் உட்பட பல்வேறு முக்கிய விபரங்களை இந்த ஆண்டு Google I/O அரங்கில் எதிர்பார்க்கலாம்.

நேரலையில் 2019 Google I/O காண யூடியூப் இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது