google i/o 2020

கூகுளின் I/O 2020 வருடாந்திர டெவெலப்பர் மாநாட்டிற்கான தேதி மே 12 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், புதிய பிக்சல் 4a மொபைல் உட்பட செயற்கை நுண்ணறிவு சார்ந்த மேம்பாடுகள் என பல்வேறு புதிய அறிமுகங்கள் வெளியாகும்.

கடந்த ஆண்டு I/O அரங்கில் கூகிள் ஆண்ட்ராய்டு கியூ தளத்தை  அறிமுகப்படுத்தியது. பிறகு அது ஆண்ட்ராய்டு 10 என பெயரை மாற்றியது. எனவே இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அறிமுகப்படுத்தும். எனவே மார்ச் மாத மத்தியில் அடுத்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பீட்டா பதிப்பு கிடைக்கப் பெறும்.

குறிப்பாக கூகுள் நிறுவனம், இந்த ஆண்டு நடைபெற உள்ள மாதாட்டில் பல்வேறு புதிய தயாரிப்புகளுடன் மேம்பட்ட கூகுள் அசிஸ்டன்ஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களில் பல்வேறு மேம்பாடுகளை கொண்டிருக்கும் வகையில் பலவற்றை காட்சிப்படுத்தலாம்.