google i/o 2020

கொரோனா வைரஸ் (COVID-19) பீதியால் இப்போது Google I/O 2020 மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக கூகுள் அறிவித்துள்ளது. முன்பாக MWC 2020 உட்பட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து ரத்து செய்யபட்டு வருகின்றது.

கடந்த 2008 முதல் கூகுள் தனது எதிர்கால படைப்புகளை I/O என்ற பெயரில் உருவாக்குநர்களின் மாநாட்டை நடத்தி வரும் நிலையில், முதன்முறையாக இந்த நிகழ்ச்சி சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் இப்போது இந்தியா உட்பட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது.

கூகுள் முதலில் I/O 2020 நிகழ்வை மே மாதம் 12 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை மவுண்டன் வியூவில் நடத்தவதற்காக திட்டமிட்டிருந்தது. இப்போது இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்,  கூகுள் இந்த நிகழ்விற்கு மாற்றாக என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது பற்றி எந்த தகவலையும் தற்போது வெளியிடவில்லை.

உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் அறிமுகங்கள், ஆட்டோ ஷோக்கள் என வரிசையாக தற்போது ரத்து செய்யப்பட்டு வருகின்றது.