கூகுள்  இன்பாக்ஸ்

அதிகம் வரவேற்பினை பெறாத இன்பாக்ஸ் சேவை மற்றும் பாதுகாப்பு கோளாறு காரணமாக வரவேற்பில்லாத கூகுள் பிளஸ் என இரண்டையும் ஏப்ரல் 2 முதல் முடிவுக்கு கொண்டு வர கூகுள் திட்டமிட்டுள்ளது.

மின்னஞ்சல் தேவைகளை பூர்த்தி செய்யும் இன்பாக்ஸ் செயலி, ஒரே நாளில் அதிக மின்னஞ்சல் செய்பவர்களுக்கும் அதிக மின்னஞ்சல்களுக்கு ரிப்ளை செய்பவர்களுக்கும் ஏதுவான வகையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இலகுவான முறையில் மின்னஞ்சலை அனுப்புவதற்கு ஏற்றதாக விளங்கும் செயலியாகும். ஆனால், வரும் ஏப்ரல் 2 , 2019 முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம். செயலியின் சேவை நிறுத்தப்படுவதானால், இதன் வசதிகள் இனி ஜிமெயில் மூலமே செயல்படும் தகவல் தெரிவித்து வருகிறது.

இன்பாக்ஸ் மின்னஞ்சல் செயலியை கூகுள் நிறுவனத்தால், கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அப்போதிலிருந்து பல்வேறு விதமான சுவாரஸ்ய மேம்பாடுகள் இன்பாக்ஸ் செயலிக்கு கூகுள் அளித்து வந்தாலும், அது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. சமீபத்தில் இதன் வசதிகளில் சிலவற்றை ஜிமெயில் சேவைக்கு கொண்டு வந்தது.

Shutting down Google+ accounts on April 2, 2019

கூகுள் பிளஸ் சேவை நிறுத்தம்

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுக காலத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற கூகுள் பிளஸ் சமூக வலைதளம் பின்னாளில் போதிய வரவேற்பின்மை காரணமாக முடங்கிய நிலையில், சமீபத்தில் எழுந்த தனியுரிமை சார்ந்த பாதுகாப்பு குறைபாட்டின் காரணமாக இந்த சேவையை கூகுள் மூடுவிழா நடத்துகின்றது.