திருமணம் செய்து கொள்கிறாயா.., கூகுள் அசிஸ்டென்ட்

இணைய உலகின் முதன்மையான நாயகன் கூகுள் நிறுவனத்தின், பல கேள்விகளுக்கு அசத்தலான உதவி மையமாக விளங்கும் கூகுள் அசிஸ்டென்ட் மூலம், இந்தியர்கள்  Google Assistant to marry you  என்ற கேள்வியை அதிகப்படியாக பதிவு செய்தது ஏன் என கேள்வி எழும்பியுள்ளது.

கூகுள் அசிஸ்டென்ட்

பல்வேறு மொழிகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் கூகுள் அசிஸ்டென்ட் சேவையில், இந்தியர்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா ? என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கு இந்திய மக்கள் மிகவும் குறும்பான பல்வேறு டிவிட்களை வெளியிட்டு வருகின்றனர்.

70 பில்லியன் கேள்விகளுக்கு பதிலை கொண்டுள்ள கூகுள் அசிஸ்டென்ட், ஆனால் இந்த கேள்விக்கும் தின்றாமல், பல்வேறு பதில்களை வழங்கி வருகின்றது. ஆனால் கூகுள் இந்தியா நிறுவனம், தனது பக்கத்தில் கேட்டுள்ள இந்த டிவிட்டுக்கு பல்வேறு கேலியான பதில்கள் தொடர்ந்து வந்த பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

இந்த டிவிட்டுக்கு சுமார் 28,000-க்கு அதிகமான விருப்பங்கள், 6,009 ரீடிவிட்கள் பெற்று தொடர்ந்து டிரென்டாகி வருகின்றது.