கூகுள் நிறுவனத்தின் Google I/O 2017 உருவாக்குநர் மாநாடு கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருவதனை ஒட்டி ஆண்ட்ராய்டு 8.0 அல்லது ஆண்ட்ராய்டு ஓ பீட்டா நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓ பீட்டா

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதிப்பு 8ல் பல்வேறு புதிய வசதிகளுடன் முந்தைய இயங்குதளங்களுடன் ஒப்பீடுகையில் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் உள்பட ஸ்மார்ட் அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது. ஆண்ட்ராய்டு என் எனப்படும் நௌகட் இயங்குதளத்தை தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த புதிய பதிப்பில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

  1. ஸ்மார்ட் டெக்ஸ்ட் செலக்ஷ்ன்

இந்த பதிப்பில் டெக்ஸ்ட்களை இலகுவாக காப்பி செய்யும் வகையில் ஸ்மார்ட் டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2. அறிவிப்பு புள்ளிகள்

அறிவிப்புகள் ஒரு ஆப்பில் இருந்து கிடைக்க பெற்றால் உடனடியாக புள்ளி போன்ற நோட்டிஃபிகேஷன் டாட் ஒன்றை வழங்குகின்றது. அதன் வாயிலாக தொடும் பொழுது அந்த இடத்திலே நாம் அந்த தகவலை காண இயலும்.

3. பிக்சர் இன் பிக்சர்

பிக்சர் இன் பிக்சர் என்ற புதிய வசதியின் வாயிலாக படங்களை காண எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. புதிய எமோஜி

எமோஜிகள் தோற்றம் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. ஆண்ட்ராய்டு வைட்ல்ஸ்

ஆண்ட்ராய்டு 8.0 வாயிலாக சிறப்பான பேட்டரி பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த பதிப்பில் பல்வேறு வகையில் பின்புல ஆப் பயன்பாட்டை குறைப்பதுடன் , கிராபிக்ஸ் போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும்.

இந்த மாநாட்டில் புதிய ஆண்ட்ராய்டு கோ இயங்குதளம் உள்பட கூகுள் லென்ஸ், ஐபோன் மொபைலுக்கு கூகுள் ஆசிஸ்டன்ஸ்,ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோவில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.