கூகுள் மெசேஜஸ் செயலியில் ஸ்பேம் பாதுகாப்பு வசதி

ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களின் அடிப்படை மெசெஜிங் செயலியாக விளங்கும், கூகுள் மெசேஜஸ் செயலியில் ட்ரூகாலர் ஆப் வழங்குகின்ற ஸ்பேம் பாதுகாப்பு போன்ற வசதியை குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கியுள்ளது.

கூகுள் மெசேஜஸ் ஆப்

கோடிக்கனக்கான ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு என பிரத்தியேகமாக கூகுள் மெசேஜிங் செயலியில் இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதியான ஸ்பேம் வாயிலாக போல குறுஞ்செய்திகளை முற்றிலும் தவிர்க்க வழி வகை செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது. இது போன்ற வசதியை ட்ரூகாலர் நிறுவனம் வழங்கி வருகின்றது.

தற்போது அடிப்படை அம்சமாக மெசேஜிங் பெற்றுள்ளதால் இது கோடிக்கனக்கான பயனாளர்களை இலகுவாக சென்றடைய வழிவகுக்கும் என கூறப்படுகின்றது. கூகுள் உங்கள் குறுஞ்செய்திகளை படிக்காமல், இந்த அம்சம் செயல்படுத்தியதும் செயலிக்கு வரும் மெசேஜ்களில் சில விவரங்கள் கூகுளுக்கு அனுப்பப்படும். உங்களுக்கு போலி குறுந்தகவல்கள் வரும் போது இந்த அம்சம் அவற்றை கண்டறிந்து தெரிவிக்கும்.

எவ்வாறு செயல்படுத்துவது 

Settings -> Advanced -> Spam protection -> Enable spam protection என பயணித்து இந்த பாதுகாப்பை ஏற்படுத்தலாம். கீழே உள்ள படத்தை கவனியுங்கள்.

முதலில் உங்கள் Settings சென்ற பின்னர் சிம் தேர்தெடுக்கவும். பிறகு Spam protection அனுகவும்.

 

 

messages spam protection enable settings