யார் இந்த ஆஸ்கர் ஃபிஷிங்கர் : கூகுள் டூடுல்

இன்றைய கூகுள் டூடுல் ஆஸ்கர் ஃபிஷிங்கர் அவர்களின் 117வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சிறப்பு ம்யூசிக் கம்போஷரை வெளியிட்டுள்ளது.

ஆஸ்கர் ஃபிஷிங்கர்

கூகுள் தேடுதல் எந்திரத்தின் முகப்பில் உங்கள் சொந்த இசைக் கலவையை உருவாக்கும் வகையில் இன்றைய கூகுள் டூடுல் ஆஸ்கர் ஃபிஷிங்கர் எனும் பிரபலமான இசை கலைஞர், அனிமேஷன் படங்களின் முன்னோடி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவரின் 117வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது.

கனிணிகள் இல்லாத காலகட்டங்களிலே அனிமேஷன் மற்றும் விஷூவல் ம்யூசிக் போன்றவற்றை உருவாக்கிய மிகவும் கைதேர்ந்த இசைக் கலைஞராகவும், 800 க்குமேற்பட்ட கேன்வாஸ் படங்களை உருவாக்கியுள்ளார், மேலும் 1929 ஆம் ஆண்டு முதன்முறையாக Woman In The Moon என்ற சையின்ஸ் ஃபிக்‌ஷன் படத்த்தில் பல்வேறு விதமான சிறப்பு அனிமேஷன் காட்சிகளையும் வடிவமைத்தார். 50 க்கு மேற்பட்ட குறும்படங்களை தயாரித்துள்ள ஃபிஷிங்கர்டி இசையுடன் கூடிய பாடல் வீடியோக்களை உருவாக்கிவரும் ஆவார்.

பலவேறு திறன்களை பெற்ற ஃபிஷிங்கர் 22, ஜூன் 1900 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டில் பிறந்த இவர் 1920 ஆம் ஆண்டு முதல் அப்ஸ்டிராக்ட் படங்களை உருவாக்கினார், 1936 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஹாலிவுட் வாயிலாக படங்களில் பணியாற்ற தொடங்கிய இவர் 31, ஜனவரி 1967 ஆம் ஆண்டு மறைந்தார்.

பல்வேறு திறன்களை கொண்ட  ஆஸ்கர் ஃபிஷிங்கர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இன்றைய கூகுள் டூடுலில் 11X16 கிரிட் டாட்கள் வழங்கப்பட்டு இதில் 4 விதமான கருவிகள் வாயிலாக உங்கள் விருப்பமான இசையை உருவாக்கலாம்.

Recommended For You