விரைவில் புத்தம் புதிய கூகுள் நியூஸ் ஆப் வருகை -  Google I/O 2018செயற்கை நுண்ணிறிவு (AI) கொண்டு செய்திகளை பகுப்பாய்வு செய்து திறம்பட பயணாளர்களுக்கு செய்திகளை வழங்குவதற்கான புதிய கூகுள் நியூஸ் மற்றும் வானிலை (Google News & Weather) ஆப் விரைவில் 127 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கூகுள் நியூஸ் ஆப்

எண்ணற்ற செய்தி நிறுவனங்கள் சர்வதேச அளவில் செய்திகளை திறம்பட வழங்கி வரும் நிலையில், கூகுள் பயனாளர்கள் செய்திகளை துல்லியமாகவும், விரைவாகவும், போலிகள் அல்லாத வகையில் சிறந்த முறையில் செயற்கை நுண்ணறிவு கொண்டு பகுப்பாய்வு செய்து வழங்க உள்ளது.

மேலும் புழக்கத்தில் உள்ள  நியூஸ் ஸ்டேன்ட்  மற்றும் வானிலை அறிக்கை ஆகிய நிலவரங்களை புதிய செயலில் ஒன்றாக இணைத்து, பல்வேறு புதிய வசதிகளை வழங்கி உள்ளது. கூகுள் வாயிலாக பயனாளர்கள் தேடும் தகவல்கள் வித்தியாசப்படும் வகையில் செய்தி பிரிவு வாயிலாக தேடும்போது தேடுதலுக்கு ஏற்ற முதல் தரமான செய்திகள், புதிய செய்தி, வீடியோ மற்றும் ட்வீட் என அனைத்தையும் ஒருங்கப்படுத்தி இந்த புதிய செயலி வழங்க உள்ளது.

மேலும் பயனாளர்கள் விரும்பும் தலைப்பை சப்ஸ்கிரைப் செய்வதற்கு மற்றும் விருப்பமான பிரிவாக இணைத்துக் கொள்ளவும் வழு வகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் உங்கள் தலைப்பு என்றால் அதனை இணைத்துக் கொண்டால் கூகுள் தொடர்பான செய்திகள் வெளிவரும்போது உங்களுக்கு அந்த செய்திகள் முன்னிலைப்படுத்தப்படும்.

தற்போது கூகுள் நியூஸ் (Google News) என அழைகப்பட்டு வரும் சேவை இனி கூகுள் செய்திகள் மற்றும் வானிலை (Google News & Weather) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் டெஸ்க்டாப் உள்ளிட்ட பயனாளர்களுக்கு அடுத்த வாரம் முதல் கிடைக்க உள்ளது.