கூகுள் பிக்சல் பட்ஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்நிகழ் நேரத்தில் 40 மொழிகளை பெயர்த்து வழங்கும் திறன் பெற்ற கூகுள் பிக்சல் பட்ஸ் (Pixel Buds) வயர்லெஸ் இயர்போன் அமெரிக்கா சந்தையில் $159 (ரூ.10,300) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் பட்ஸ்

கூகுள் பிக்சல் பட்ஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

 

சமீபத்தில் ஆப்பிள் அறிமுகம் ஆப்பிள் பாட்ஸ்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ள பிக்சல் பாட்ஸ் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஆகிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல்புக் லேப்டாப் ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் அசிஸ்டென்ஸ் ஆதரவு பெற்ற பட்ஸ் வாயிலாக குரல் வழியில் மேற்கொள்ளும் அனைத்து உதவிகளும் இயர்போன் வழியாக நமக்கு குரல் வழியாகவே பிக்சல்பாட்ஸ் வழிங்கி வடும். இதற்கு என மொபைல் வழியாக டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த இயர்போனில் எவ்விதமான பட்டனகளும் வழங்கப்படாமல் அனைத்தும் சைகைகள் (gestures) வாயிலாகவே பெறலாம்.

கூகுள் பிக்சல் பட்ஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

நீங்கள் அறிந்திராத மொழியில் மற்றவர்களுடன் பேச வேண்டுமெனில் மிக எளிமையாக நிகழ்நேரத்தில் உங்களுக்கு உதவி செய்வதுடன் மொத்தம் 40 மொழிகள் ஆதரவை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக நீங்கள் ஜப்பானிஷ் மொழியில் பேச வேண்டுமெனில் Help me speak Japanese என கூறினால் உடனடியாக நீங்கள் பேசுவதனை ஜப்பானிய மொழியில் பெயர்த்து உடனடியாக ஸ்பீக்கர் வாயிலாக வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் பட்ஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

பிக்சல் பட்ஸ் ஆதரவினை பெற குறைந்தபட்சம் கூகுள் அசிஸ்டென்ஸ் ஆதரவு பெற்ற நௌகட் 7.0 இயங்குதளத்தை பெற்ற ஆண்ட்ராய்டு அல்லது பிக்சல் மொபைல்கள் தேவைப்படுகின்றது.

கூகுள் பிக்சல் பட்ஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here