குரோம் ஓஎஸ் கொண்டு இயக்கப்படுகின்ற உயர் ரக கூகுள் பிக்சல்புக் லேப்டாப் அமெரிக்கா சந்தையில் $999 (ரூ.65,000) ஆரம்ப விலையில் இருவிதமான ரேம் பெற்றதாக வெளியிடப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல்புக் லேப்டாப்

முந்தைய க்ரோம் புக் மடிக்கணினியை விட மிக சிறப்பான மேம்பாடுகளை கொண்டதாகவும், பல்வேறு வசதிகளுடன் புதிய பெயராக பிக்சல்புக் என சூட்டப்பட்டுள்ளது. கூடுதலாக பிக்சல்புக் பென் ஒன்று $99 (ரூ.6500) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

12.3 அங்குல Quad HD  திரையுடன் 2400×1600 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக உள்ள இந்த லேப்டாப் மொத்தம் மூன்று வகையான மாறுபாடுகளில் கிடைக்கின்றது. இரண்டு 8ஜிபி மற்றும் 16ஜிபி ஆகிய இருவிதமான ரேம்களை பெற்றதாக வந்துள்ளது.

ஆரம்ப நிலை மாடலில் கோர் ஐ5 பிராசஸருடன் 8ஜிபி ரேம் பெற்று 128 GB SSD உடன் கிடைக்கின்றது. அடுத்து மாடலில் கோர் ஐ5 பிராசஸருடன் 8ஜிபி ரேம் பெற்று 256 GB SSD உடன் கிடைக்கின்து. உயர்ரக வேரியன்டில் கோர் ஐ7 பிராசஸருடன் 16ஜிபி ரேம் பெற்று 512 GB SSD பெற்றிருக்கின்றது.

10 மிமீ தடிமன் கொண்ட இந்த மடிக்கணினி 1.1 கிலோகிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இதில் வை-ஃபை, ப்ளூடூத், 720p வெப்கேமரா அதிகபட்சமாக 10 மணி நேரம் பேட்டரி தாங்கும் திறன் பெற்றதாக வந்துள்ளது. முழுமையாக மடிக்கும் வகையிலான லேப்டாப்பாக பிக்சல்புக் விளங்குகின்றது.

கூகுள் பிக்சல்புக் விலை பட்டியல் (அமெரிக்கா)

பிக்சல்புக் 8GB, 128GB SSD – $999 (ரூ.65,000)

பிக்சல்புக் 8GB, 256GB SSD – $1249 (ரூ.81,000)

பிக்சல்புக் 16GB, 512GB SSD – $1649 (1,07,000)

பிக்சல்புக் பென் விலை – $99 (ரூ.6500)

அமெரிக்கா சந்தையில் வரும் அக்டோபர் 31ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.