கூகுள் டூடுல் நினைவுக்கூறும் முகமது ரஃபி பற்றி அறிவோம்

உலகின் முன்னணி தேடுதல் நிறுவனமான கூகுள் முக்கிய தினங்களில் டூடுலை வெளியிட்டு வரும் நிலையில், பிரபல இந்தி பின்னணிப் பாடகரான முகமது ரஃபி அவர்களின் 93வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

முகமது ரஃபி

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமைந்துள்ள அமிர்தசரஸ் மாவட்டத்தில் டிசம்பர் 24, 1920 ஆம் ஆண்டு பிறந்த முகம்மது ரஃபி அவர்களின் தந்தை முடி திருத்தும் தொழிலை மேற்கொண்டு வந்தார்.  இளம் வயதிலே பாட்டு பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த ரஃபி அவர்களின் திறமையை உணர்ந்த குடும்ப நண்பரும் பின்னாளின் அந்த வீட்டு மாப்பிள்ளையுமான அப்துல் ஹமீத், 1944-ல் மும்பைக்கு அழைத்துவந்தார்.

முதன்முறையாக பின்னணி பாடகராக 1941 ஆம் ஆண்டு லாகூரில் பஞ்சாபி மொழி படத்தில் ரஃபி அறிமுகமானர்,அதனை தொடர்ந்து 1944 முதல் இந்தி உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் பல கோடி உள்ளங்களை கவர்ந்த பாடகராக விளங்குகிறார்.

1940 – 1980 ஆம் ஆண்டு வரை இடையே 25 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். 6 முறை பிலிம்பேர் விருதுகள், தேசியத் திரைப்பட விருது, பத்மஸ்ரீ உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு மேல் இந்தியத் திரைப்பட பின்னணி பாடக  உலகில் இனிய மதுர குரலால் ஆதிக்கம் செலுத்தி வந்த முகமது ரஃபி 56-வது வயதில் மறைந்தார்.

இவரது நினைவு போற்றும் வகையில் கூகுள் வெளியிடப்பட்டுள்ள டூடுல்  பின்னணி பாடுவதுடன் கூடியதாக மும்பையைச் சேர்ந்த கலைஞர் உருவாக்கியுள்ளார்.

Recommended For You