Google Shoelace
Google Shoelace

கூகுள் பிளஸ் தோல்வியை தொடர்ந்து அடுத்த முயற்சியாக ஷூலேஸ் (Google Shoelace) என்ற பெயரில் கூகுள் ஏரியா 120 குழுவின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. தேடுதல் முதல் பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் கூகுள் நிறுவனம், சமூக வலைதளம் சார்ந்த சேவையில் தொடர் தோல்விகளை மட்டும் சந்தித்துள்ள நிலையில் அடுத்ததாக கூகுள் ஷூலேஸ் என்ற பெயரில் தனது புதிய சமூக வலைதளத்தை செயற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தற்போது அழைப்பின் பெயரில் மட்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது. கூகுளின் ஷூலேஸின் நோக்கம் “ஒரே ஆர்வமுள்ள மற்றவர்களுடன் இணைப்பினை ஏற்படுத்துகிறது” நீங்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் அல்லது செயல்பாட்டிற்கான பட்டியலை உருவாக்கலாம், மேலும் உங்களுடன் இணைவதற்கு நண்பர்கள் மற்றும் அந்நியர்களை அழைக்கவும். கூடுதலாக, ஷூலேஸ் நீங்கள் இருக்கக்கூடிய நிகழ்வுகளை வெளிப்படுத்தும்.

கூகுள் ஷூலேஸ்

முதற்கட்டமாக கூகுள் நிறுவனத்தின் ஏரியா 120 என்பது சுவாரஸ்யமான பல்வேறு புதிய தயாரிப்புகளை மேற்கொள்ளும் முயற்சியாக அறியப்படுகின்றது. இந்த முயற்சியில் முதற்கட்டமாக தனது நிறுவனத்தின் பணியாளர்களை கொண்டு கூகுள் சோதனை செய்து வருகின்றது.

தற்போது ஆரம்பகட்டத்தில் உள்ள கூகுள் ஷூலேஸ் ஆனது முதற்கட்டமாக தற்போது இது நியூயார்க் நகரில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் ஷூலேஸ் ஆண்ட்ராய்டு மற்றும் iOS  மூலம் இயங்குகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி நீக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஏபிகே மிரர் தளத்தில் இந்த ஆப் கிடைக்கின்றது.

தற்போது இந்த செயலி அழைப்பின் பேரில் மட்டும் பயன்படுத்த இயலும். அனைவருக்கும் கூகுள் அறிமுகம் செய்வதற்கு கூடுதல் காலம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கூகுள் ஷூலேஸ் இணைய முகவரி – https://shoelace.nyc/