மூன்று தரப்பு அப்ளிகேஷன்கள் உங்கள் இமெயிலை படிக்க கூகிள் நிறுவனம் இன்னும் அனுமதி அளித்து வருவதாக தகவல்

கடந்த ஜூலை மாதம் மூன்று தரப்பு அப்ளிகேஷன்கள் உங்கள் இமெயிலை படிக்க கூகிள் நிறுவனம் இன்னும் அனுமதி அளித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்னும் சில மூன்று தரப்பு அப்ளிகேஷன்கள் உங்கள் ஜிமெயிலை அக்சஸ் செய்து அத்தகவலை பகிர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் ஜிமெயிலை 1.4 மில்லியன் மக்கள் பயண்படுத்தி வருகின்றனர். இது மற்ற பெரிய 25 இமெயில் வழங்கும் எண்ணிகையை விட அதிகமாகும், இதுகுறித்து பதிலளித்த கூகிள் நிறுவனம், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் இரண்டுக்கும் வெளிப்படையாகவே சேவை அளித்து வருவதாகவும், இதில் எப்படி தகவல்கள் பயன்படுத்துபடுகிறது என்பது கண்டுபிடித்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய கூகிள் கிளவுட், பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் தனியுரிமை துறை இயக்குனர் சுசான் ஃப்ரே, ஜிமெயிலை மேம்படுத்த, இமெயில் கிளைன்ட், டிரிப் பிளானர் மற்றும் கஸ்டமர் ரிலேஷன்சிப் மேனேஜ்மென்ட் போன்ற மற்ற டெவலப்பர்களுடன் இணைந்து சில அப்ளிகேஷன்களை உருவாக்கி வருகிறோம், அதனால், நீங்கள் உங்கள் மெயிலை அக்சஸ் செய்து கொள்ள முடிகிறது. மெயிலை அனுப்பும் முன்பு, கூகிள் அல்லாத அப்ளிகேஷன்கள் உங்கள் ஜிமெயிலை அக்சஸ் செய்கிறதா என்று பலமுறை சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனை ஆட்டோமேட்டிக்காகவும், மெனுவலாகவும் மேற்கொள்ளப்படும். என்றார்.

கடந்த 2017ல் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் தங்கள் ஜிமெயிலில் வரும் விளம்பரங்களை பிரசன்லைஸ் செய்து கொண்டால், மற்றவர்கள் அந்த இமெயிலை படிப்பது தடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

Recommended For You