கூகுள் ஸ்டீரிட் வியூ வசதி கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

உலகின் முன்னணி இணைய ஜாம்பவான கூகுள் நிறுவனம், இந்தியாவில் தஞ்சை பெரியக்கோவில், சின்னசுவாமி அரங்கம், செங்கோட்டை, வாரணாசி நதிக்கரை, தாஜ் மஹால் உட்பட முக்கிய இடங்களை கூகுள் ஸ்டீரிட் வியூ வசதி வாயிலாக 360 டிகிரி கோணத்தில் பதிவு செய்யும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கூகுள் ஸ்டீரிட் வியூ

சர்வதேச அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்டீரிட் வியூ வசதியை , இந்தியாவின் சரித்திர கால பெருமையை பெற்ற  தஞ்சை பெரியக்கோவில், செங்கோட்டை, வாரணாசி நதிக்கரை, குதிப் மினார், நாளந்தா பல்கலைக் கழகம் மற்றும் தாஜ் மஹால் ஆகியவற்றை 360 டிகிரி பனோரமிக் மற்றும் தெரு-நிலை 3D படங்களாக மாற்றும் ஸ்ட்ரீட் வியூ -க்கு 2015 ஆம் ஆண்டில் அனுமதிக்கான விண்ணப்பத்தை அரசிடம் சமர்பித்திருந்தது.

இதுகுறித்து லோக்சபாவில்,  உள்துறை மந்திரி ஸ்ரீஹன்ஸ்ராஜ் கங்கரம் அஹிர் வெளியிட்ட அறிக்கையில்,

ஸ்டீரிட் வியூ ஆப்பை பயன்படுத்தி இந்திய நகரங்கள், சுற்றுலா இடங்கள், மலைகள் மற்றும் ஆறுகள் ஆகியவை 360 டிகிரி பனோரமிக் மற்றும் தெரு-நிலை படங்கள் மூலம் ஆராயலாம்.

இந்தியாவில் சோதனை ஓட்ட முறையில் தஞ்சை பெரியக்கோவில், செங்கோட்டை, வாரணாசி நதிக்கரை, குதிப் மினார், நாளந்தா பல்கலைக் கழகம் மற்றும் தாஜ் மஹால் ஆகியவற்றை 360 டிகிரி பனோரமிக் மற்றும் தெரு-நிலை 3D படங்களாக மாற்றும் கோரிக்கையை நிராகரித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.