இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றத்துக்கான முறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கூகுள் நிறுவனம் கூகுள் டேஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் டேஸ்

இந்தியாவில் டிஜிட்டல் சார்ந்த தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற செயலிகளை மத்திய அரசின் யுபிஐ அடிப்படையில் பல்வேறு வசதிகளை கொண்டதாக மிக எளிமையாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்பட ஆங்கிலம், தெலுங்கு, கனடா, இந்தி, பெங்காலி, குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் கிடைக்க தொடங்கியுள்ள இந்த தேஜ் செயிலில் மிக எளிமையாக பணத்தை அனுப்பவும் பெறவும் இயலும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

யூபிஐ அனுமதி பெற்ற வங்கி கணக்கு மொபைல் எண்களை கொண்டு கணக்கினை துவக்கும்போது தானாகவே இயங்கி இதற்கான கணக்கை உருவாக்குவதுடன் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு பயனாளர்களுக்கும் வழங்குகின்றது.

இந்த செயலில் வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான கேஸ் மோட்  என்ற வசதி வாயிலாக பணத்தை அருகாமையில் உள்ள மொபைல்களுக்கு இலகுவாக ஸ்வைப் செய்தால் பெறுவதற்கான எண் இல்லாத பட்சத்திலும் வழங்கலாம். மேலும் உங்கள் தொடர்புகளை தானாகவே தேஜ் ஆப் பெற்று மிக இலகுவாக பணத்தை பரிமாற்ற ,QR  நுட்பத்தில் பணத்தை செலுத்த உதவுகின்றது.

நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 20 முறை பணப்பறிமாற்றமும் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஸ், எச்.டி.ஃஎப்.சி, எஸ்.பி.ஐ மற்றும் UPI சார்ந்த இணைப்பு பெற்ற அனைத்து வங்கிகளிலும் கூகுளின் இந்த செயலியை இணைத்துக் கொள்ளலாம்.

கூகுள் டேஸ் ஸ்க்ராட்ச் கார்டு சலுகை

கூகிளின் சிறப்பு சலுகையாக டேஸ் ஆப்பினை பரிந்துரை செய்யும் பட்சத்தில் அதனை இன்ஸ்டால் செய்தால் ரூ.51 கேஸ்பேக் கிடைக்கும், இது போன்று இரு நண்பர்களுக்கு தேஜ் செயலியை பரிந்துரைத்து செயல்படுத்தினால் ரூ.100 வரை கேஸ்பேக் கிடைக்கும் என்பதனால், இதனை உங்களது வங்கி கணக்கில் பெற்றுக் கொள்ளலாம்.

கூகுள் டேஸ் ஸ்க்ராட்ச் கார்டு வழியாக பரிமாறத்தை மேற்கொள்ளும் போது வாரம் ரூ.1000 என சிறப்பு கேஸ்பேக் சலுகையும், லக்கி சன்டே என்ற பெயரில் ஞயிற்றுக் கிழமைகள் என்றால் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆண்ட்ராய்டு கூகுள் Tez – https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user&hl=en

ஆப்பிள் கூகுள் Tez – https://itunes.apple.com/in/app/tez-a-new-payments-app-by-google/id1193357041?mt=8

மேலதிக விபரங்களுக்கு –> https://tez.google.com/

 

1 COMMENT

  1. வோடபோன் வழங்கும் லாவா இலவச பீச்சர் போன் சலுகை விபரம் – Tamil News – தமிழ் செய்திகள் – TamilValayam.com

    […] வருகை விபரம் Next articleகூகுள் டேஸ் பேமெ… […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here