தமிழ் உட்பட 7 இந்திய மொழிகளில் கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்

கூகுள் வழங்குகின்ற சேவைகளில் மிக முக்கியமான ஒன்று மொழிபெயர்ப்பு வசதியாகும். கூகுள் டிரான்ஸ்லேட் செயலில் தமிழ் உட்பட 7 இந்திய மொழிகள் ஆஃப்லைன் மொழிபெயர்ப்பு வோர்ட்லென்ஸ் வசியும் இணைக்கப்பட்டுள்ளது.

கூகுள் டிரான்ஸ்லேட்

சர்வதேச அளவில் கூகுள் மொழிபெயர்ப்பு வசதியை பயன்படுத்துவதில் முதல் நான்கு நாடுகளுக்குள் இடம்பெற்றுள்ள இந்தியாவில் 15 க்கு மேற்பட்ட அதிகார்வப்பூர்வ மொழிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சர்வதேச அளவில் கூகுள் டிரான்ஸ்லேட்டில் தினமும் 140 பில்லியன் வாரத்தைகள் மொழிப்பெயர்ப்பு செய்யப்படுகின்றது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது, பெங்காலி, குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய 7 மொழிகளில் ஆஃப்லைன் வசதி இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு ஆஃப்லைன் வசதி பெற இதற்கு என வழங்கப்பட்டுள்ள பிரத்யேக வசதியை பேக்கினை தரவிறக்கும் வசதியை வழங்கியுள்ளது.

வேறு மொழி மாநிலங்களில் பயணிக்கும் போது அல்லது பெயர் பலகைகளை ஸ்கேன் செய்தால் அதனை தானாகவே மொழிபெயர்த்து வழங்குகின்றது. மேலும் பெங்காலி மொழியிலிருந்து தமிழ் மற்றும் தமிழ் மொழியிலிருந்து பெங்காலி மொழிக்கும் உரையாடலை வழங்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

Recommended For You