பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கூகுள் பிரிவு புதிதாக ஆண்ட்ரய்டு பயனாளர்களுக்கு கூகுள் ட்ரைஆங்கிள் ஆப்  (Google Triangle App) என்ற பெயரில் மொபைல் டேட்டாவை சேமிக்கும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.

மொபைல் டேட்டா சேமிக்க கூகுள் ட்ரைஆங்கிள் ஆப் அறிமுகம்

கூகுள் ட்ரைஆங்கிள் ஆப்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சோதனை ஓட்ட அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ட்ரைஆங்கிள் ஆப் வாயிலாக மொபைல் டேட்டா பயன்பாட்டினை மிகவும் பயனுள்ளதாக மாற்றியமைக்கும் வகையில் உருவாக்ககப்பட்டுள்ளது.

குறிப்பாக பின்புலத்தில் டேட்டா எடுத்துக்கொள்ளும் ஆப்களை தடுத்து நிறுத்தி டேட்டாவை சேமிக்கின்றது. குறிப்பிட்ட நேரங்களில் தேவையற்ற ஆப்ஸ்கள் பின்புலத்தில் டேட்டா பயன்படுத்துவதனை முற்றிலும் தடுத்து நிறுத்துவதனால் பெருமளவு தரவுகளை மிச்சப்படுத்த உதவுகின்றது.

மொபைல் டேட்டா சேமிக்க கூகுள் ட்ரைஆங்கிள் ஆப் அறிமுகம்

குறிப்பிட்ட கால இடைவெளி நேரத்தில் அதாவது ஒரு 30 நிமிடத்திற்கு மட்டுமே டேட்டா பயன்படுத்தும் வகையிலும் மற்ற நேரங்களில் அந்த ஆப் டேட்டா எடுத்துக்கொள்வதனைமுற்றிலும் தடுத்து நிறுத்தலாம். இதன் காரணமாக சராசரியாக 10எம்பி டேட்டா வரை சேமிக்கலாம்.

தற்போது பிலிப்பைன்ஸ் சந்தையில் அமதிகார்வப்பூர்வமாக கிடைக்கின்ற இந்த செயலி மற்ற நாடுகளுக்கும் விரிவுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. தற்போது பயன்படுத்த விரும்புபவர்கள் ஏபிகே மிரர் வாயிலாக தரவிறக்கி கொள்ளலாம்.