எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதி வரி
மேக் இன் இந்தியா திட்டத்தின் செயற்பாட்டை அதிகரிக்கும் நோக்கிலான நடவடிக்கையை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. எனவே, இறக்குமதி செய்யப்படுகின்ற எலக்ட்ரானிக் சார்ந்த கருவிகளான மொபைல் போன், வீடியோ கேமரா, மைக்ரோவேவ் ஒவன், எல்இடி பல்ப் மற்றும் தொலைக்காட்சி மேலும் பல கருவிகளுக்கு இறக்குமதி வரியை அதிகரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக தொலைக்காட்சிகளுக்கான இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் விலை கனிசமாக உயர உள்ளது. இந்தியாவில் ஐபோன் SE மாடல் மட்டுமே ஒருங்கிணைக்கப்படுகின்றது. இந்தியாவில் விற்பனையாகின்ற ஆப்பிள் நிறுவனத்தின் 88 சதவீத அளவிற்கான கருவிகள் இறக்குமதி செய்யப்படுவதாகும்.
மேலும் வீடியோ கேமரா கருவிகளுக்கும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற 10 மொபைல்களில் 8 போன்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.