jio

ஜியோ வருகைக்குப் பின்னர் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் அபாரமான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் ஹாட்ஸ்டார் பொழுதுபோக்கு சேவை ஆப்களில் 49 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நேரலை தொலைக்காட்சி சேவை வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றது.

TechARC-Unomer MegaInsight ஆய்வின்படி, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் சுமார் 79 சதவீதம் பேர் இந்தியாவில் பொழுதுபோக்கு (OTT -over-the-top) மொபைல் ஆப் ஏவை அணுகுகின்றனர். இது யூடியூப் மற்றும் பிற பொழுதுபோக்குக்கு டிக்டாக் போன்ற தளங்களும் இதில் அடங்கும்.

கடந்த 3 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் டெலிகாம் ஆபரேட்டர்களின் தரப்பிலிருந்து அதிகப்படியான OTT பொழுதுபோக்கு  சேவைகளின் வளர்ச்சியை அதிகரிக்க முக்கிய பங்காற்றியுள்ளது.

பொழுதுபோக்கு OTT செயலி பிரிவில் ஸ்மார்ட்போன் சாதனங்களில் ஹாட்ஸ்டார் அதிகபட்சமாக 49 சதவீத சந்தையை கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, டைம்ஸ் இன்டர்நெட்டின் MX பிளேயர் 42 சதவீத பங்களிப்பை வழங்குகின்றது. ஹாட்ஸ்டார் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக ஐபிஎல், உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 போன்ற கிரிக்கெட் போட்டிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

அமேசான் பிரைம் வீடியோ 15 சதவீத பங்கினை கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, நெட்ஃபிளிக்ஸ் 13 சதவீதமாக உள்ளது.

லைவ் டிவி ஆப் சேவையில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடையே ஜியோ டிவி ஆப் 30 சதவீத பங்களிப்புடன் சந்தையில் முன்னிலை வகிக்கிறது. மேலும் ஏர்டெல் மற்றும் வோடபோன் ப்ளே ஆகிய சேவைகள் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே தொடர்வதாக  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ சேவை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருவதாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.