வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் எவ்வாறு வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறுவது அல்லது நிரந்தரமாக வாட்ஸ்அப் குரூப்பை டெலிட் செய்வது எப்படி ? என காணலாம்.

வாட்ஸ்அப் குரூப் டெலிட்

  • 20 கோடி வாடிக்கையாளர்கள் இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள்.
  • வாட்ஸ்அப் குழுவில் அதிகபட்சமாக 256 நபர்கள் சேர்க்கலாம்.
  • வாட்அப் வதந்திகள் மற்றும் போலி செய்திகளை பரப்புவதில் முன்னிலை வகிக்கின்றது.

சமீபத்தில் வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில்  வாட்ஸ்அப், பேஸ்புக் அல்லது மற்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக வதந்திகளை பரப்பும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குரூப் அட்மின்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

வழிமுறை ஒன்று —

வாட்ஸ் அப் குழு உரையாடலை டெலிட் செய்யவோ அல்லது நீங்கள் அந்த குழுவில் இருந்து விடைபெற குழுவின் மீது லாங் பிரஸ் செய்தால் குழுவில் இருந்து விலக வழி மூன்று புள்ளிகள் உள்ள இடத்தினை தேர்வு செய்து வெளியேறலாம்.

வழிமுறை இரண்டு

வாட்ஸ் அப் குரூப்பை நிரந்தரமாக நீக்க உங்கள் க்ரூப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் நீக்கி விட்டு இறுதியாக க்ரூப் அட்மின் மட்டும் இருக்கும் பட்சத்தில் குழுவை விட்டு அடமின் வெளியேறினால் குழு நிரந்தரமாக அழித்து விடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here