கூகுள் நிறுவனத்தின் முன்னணி சேவைகளில் ஒன்றான ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் உங்களுடைய மின்னஞ்சலை ஆராய்ந்து அதற்கு ஏற்ப விளம்பரம் வழங்குவதனை நிறுத்திக் கொள்ளவதாக கூகுள் அறிவித்துள்ளது.

ஜிமெயில் ..! உங்கள் மின்னஞ்சலை கூகுள் படிக்க தடை விதிப்பது எப்படி ?

ஜிமெயில் விளம்பரம்.

உலகின் முதன்மையான மின்னஞ்சல் சேவையாக கருதப்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையில் விளம்பரங்கள் தோன்றுவதனை அறிந்திருப்பீர்கள், அவ்வாறு தோன்றும் விளம்பரங்கள் நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் செய்திகளுக்கு ஏற்ப தோன்றும், இது போன்ற விளம்பரங்களை கூகுள் காட்சிப்படுத்துவதற்கு உங்களது மின்னஞ்சலை படித்து வருகின்றது.

இனி , இதுபோன்ற விளம்பரங்களுக்காக பயனாளர்கள் மின்னஞ்சல்கள் ஸ்கேன் செய்யப்படாது என கூகுள் தனது பிளாக்கர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே ஜிமெயில் மட்டுமல்லாமல் நிறுவனங்கள் பயன்படுத்தும் ஜி சூட், கூகுள் ட்ரைவ், கூகுள் டாக்ஸ் போன்றவற்றிலும் கடைபிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இதனை தடை செய்வது என காணலாம்.

உங்களுடைய ஜிமெயில் கணக்கிலிருந்து  https://myaccount.google.com/privacy எனும் Personal info & privacy பக்கத்திற்கு சென்ற பின்னர்  அதில் உள்ள Ads Settings பகுதிக்கு சென்று டோக்கல் பட்டை ஆஃப் செய்து கொள்ளுங்கள்.

படத்தில் உள்ளதை போல

ஜிமெயில் ..! உங்கள் மின்னஞ்சலை கூகுள் படிக்க தடை விதிப்பது எப்படி ?

ஆனால் இலவச ஜிமெயில் பதிப்பில் விளம்பரங்கள் தொடர்ந்து வழங்கப்படும், ஆனால் உங்கள் மின்னஞ்சல் மட்டுமே ஆராயப்படாது, உங்களது தேடுதல் போன்றவற்றின் ஆதாரங்களாக கொண்டு விளம்பங்களை கூகுள் காண்பிக்கும், இந்நிறுவனத்தின் 88 சதவிகித வருமானம் விளம்பரங்கள் வாயிலாகவே பெறுகின்றது.