மொபைல் எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ் ஆப் இல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

என்னதான் டெலிகாம் நிறுவங்கள் நாள் ஒன்றிற்கு 100 மெசேஜ்கள் வழங்கினாலும், வாட்ஸ் ஆப் இல் அன்லிமிடெட் மெசேஜ் அனுப்புவது மட்டும் தான் அனைவர்க்கும் பிடித்திருக்கிறது. முகப்புத்தகம், டிவிட்டர் பயன்படுத்தாதவர்கள் கூட இருக்கலாம் ஆனால் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாதவர்கள் கிடையாது. அதற்கேற்ப வாட்ஸ் ஆப் இல் அடிக்கடி நிறைய புதிய அப்டேட்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

உண்மையைச் சொன்னால் வாட்ஸ் ஆப் இல் இருக்கும் பல சேவைகளை நாம் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. 30 சதவீதம் மட்டுமே நாம் வாட்ஸ் ஆப் இன் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்துகிறோம்.

மொபைல் எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ் ஆப் இல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

வாட்ஸ் ஆப் இல் தெரியாத எண்ணில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு பதில் அளிக்க அந்த எண்ணை நாம் நமது மொபைல் இல் சேமிக்க வேண்டியது அவசியம். அப்படி ஒருவரது காண்டாக்ட் எண்ணை மொபைல் இல் சேமிக்காமல் எளிதாக பதில் அளிப்பதற்கான சேவை வாட்ஸ் ஆப் இல் இருக்கிறது என்று இன்னும் பலருக்கு தெரியவில்லை.

எப்படி மொபைல் எண்களைச் சேமிக்காமல் வாட்ஸ் ஆப் இல் பதில் அளிக்கலாம் என்று பார்க்கலாம் . – கூகுள் க்ரோம் அல்லது வேறு ஏதேனும் வெப் ப்ரவுசரை உங்கள் மொபைல் போன் இல் திறந்து கொள்ளுங்கள். – உங்கள் வெப் பிரௌசர் இல் https://api.WhatsApp.com/send? என்று டிபே செய்து கொள்ளுங்கள். – எண் இடுகைக்கான இடத்தில் உங்களுக்கு வந்த அந்த தெரியாத எண்ணெய் பஹிவு செய்யுங்கள். – +91 உடன் சேர்த்து 10 இலக்கு மொபைல் எண்ணை டிபே செய்யுங்கள். – இப்பொழுது எண்டர் அழுத்தவும் – திரையில் மெசேஜ்(Message) என்று பச்சை நிற பட்டன் தோன்றும், அதை கிளிக் செய்யவும். – இப்பொழுது உங்களின் வாட்ஸ் ஆப் பக்கம் தானாக, அந்த எண்ணுக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்கு செல்லும். – இப்பொது உங்களின் மெசேஜை டைப் செய்து அனுப்புங்கள்.

மொபைல் எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ் ஆப் இல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

இத்துடன் https://wa.me/WhatsAppNumber என்ற இந்த லிங்கையும் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம். WhatsAppNumber என்பதற்குப் பதில் எண்ணை டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.